மாவட்ட செய்திகள்

புதுச்சேரி, காரைக்காலில் கடலோர பாதுகாப்பு ஒத்திகை + "||" + Coast Guard rehearsal at Pondicherry, Karaikal

புதுச்சேரி, காரைக்காலில் கடலோர பாதுகாப்பு ஒத்திகை

புதுச்சேரி, காரைக்காலில் கடலோர பாதுகாப்பு ஒத்திகை
புதுவையில் கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்து வருகிறது.
புதுச்சேரி, 

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பிறகு, மத்திய அரசு கடலோர மாவட்டங்களில் ஆபரேசன் ஆம்லா மற்றும் சாகர் கவாச் உள்ளிட்ட பாதுகாப்பு ஒத்திகை நடத்தி வருகிறது. ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும், இந்த ஒத்திகை சீ விஜில் என்ற பெயரில் நேற்று நடத்தப்பட்டது.

அதன்படி புதுவை கடலோர பகுதியில் நேற்று காலை 6 மணிக்கு ஒத்திகை தொடங்கியது. நாளை மாலை 6 மணிவரை இது நடக்கிறது. இந்த ஒத்திகையில் புதுவை போலீசார், கடலோர காவல்படையினர் இணைந்து செயல்பட்டனர். கடலுக்குள் ரோந்து படகில் சென்று கண்காணிப்பில் ஈடுபட்டு ஒத்திகை நடத்தினர்.

காரைக்கால்

காரைக்கால் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நிகரிகாபட், போலீஸ் சூப்பிரண்டு வீரவல்லபன் உத்தரவின் பேரில், கடலோர போலீஸ் இன்ஸ்பெக்டர் மர்த்தினி தலைமையில்,போலீசார் கடலிலும், கரையிலும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு ஒத்திகை நடத்தினர்.

அப்போது காரைக்கால் மார்க் துறைமுகத்தில், ஊடுருவ முயன்ற 2 தமிழக காவலர்களை, கடலோர போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

கடல் பகுதியிலும், கடற் கரையோர பகுதியிலும் சந்தேகப்படும்படியான நபர்களின் நடமாட்டம் ஏதேனும் இருந்தால் அதுகுறித்த தகவலை போலீசாருக்கு தெரிவிக்குமாறு கடலோர பகுதியில் வசிக்கும் மக்களை போலீசார் கேட்டுக்கொண்டனர்.

ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து வரும் மீனவர்களிடமும் சந்தேகப்படும்படியான நபர்கள் நடமாட்டம் பற்றி தெரியவந்தால் உடனே அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

1. அபுதாபியில், கடல் பாதுகாப்பு கண்காட்சி தொடங்கியது விமானங்கள் வானில் வண்ணப் பொடிகளை தூவி சீறி பாய்ந்தன
அபுதாபியில் கடல் பாதுகாப்பு தொடர்பான கண்காட்சியை நிர்வாக கவுன்சில் உறுப்பினர் ஷேக் ஹமத் பின் ஜாயித் அல் நஹ்யான் தொடங்கி வைத்தார். அப்போது அமீரக விமானப்படை விமானங்கள் வானில் வண்ணப் பொடிகளை தூவி சீறி பாய்ந்து சென்றன.
2. கொரோனா பாதுகாப்பு விதிமீறல்: சார்ஜாவில் ஹைபர் மார்க்கெட், சலூன் கடைக்கு சீல் பொருளாதார மேம்பாட்டுத்துறை நடவடிக்கை
கொரோனா பாதுகாப்பு விதிமீறல்: சார்ஜாவில் ஹைபர் மார்க்கெட், சலூன் கடைக்கு சீல் பொருளாதார மேம்பாட்டுத்துறை நடவடிக்கை.
3. தஞ்சை அருகே உள்ள திருக்கானூர்பட்டியில் இன்று ஜல்லிக்கட்டு பாதுகாப்பு பணியில் 300 போலீசார்
தஞ்சை அருகே திருக்கானூர்பட்டியில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) ஜல்லிக்கட்டு நடக்கிறது. பாதுகாப்பு பணியில் 300 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
4. தமிழக சட்டசபை தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்கு 4,500 துணை ராணுவ வீரர்கள் மத்திய அரசு முடிவு
தமிழக சட்டசபை தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்கு 4 ஆயிரத்து 500 துணை ராணுவ வீரர்களை கொண்டு வருவதென்று மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
5. கொரோனா பாதுகாப்பு விதிமீறல் சுற்றுலா நிறுவனம் மூடல்;50 ஆயிரம் திர்ஹாம் அபராதம்
துபாய் நகரின் பாலைவனப் பகுதி ஒன்றில், சுற்றுலா நிறுவனம் ஒன்று சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. நகர் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இந்த நிறுவனத்தில் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது இந்த சந்திப்பு நிகழ்ச்சிக்கு சுற்றுலா நிறுவனம் முறையான அனுமதி பெறவில்லை என தெரிய வந்தது. மேலும் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளும் சரியாக பின்பற்றப்படவில்லை.

அதிகம் வாசிக்கப்பட்டவை