நாளை சட்டப்பேரவை தொடங்கும் முன் இறுதி முடிவு: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி + "||" + We have decided to disclose our strategy on the floor of the House: Puducherry CM V Narayanasamy
நாளை சட்டப்பேரவை தொடங்கும் முன் இறுதி முடிவு: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி
சட்டப்பேரவை கூடுவதற்கு முன் நாளை காலை இறுதி முடிவு எடுக்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை,
சட்டப்பேரவை கூடுவதற்கு முன் நாளை காலை இறுதி முடிவு எடுக்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் திமுக கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது
இந்தக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் நாராயணசாமி, சட்டப்பேரவை கூடுவதற்கு முன் நாளை காலை இறுதி முடிவு எடுக்கப்படும். எம்எல்ஏக்கள் உடனான ஆலோசனை கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. கூட்டணி கட்சிகளிடம் கருத்துகளை கேட்டறிந்து எங்களின் நிலைப்பாட்டை தெரிவிப்போம் என்றார்.
புதுவை சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. புதுவையில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசின் பலம் 12 ஆக குறைந்துள்ளது.