தேசிய செய்திகள்

புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு அனைத்து துறைகளையும் சீரழித்துவிட்டது; பிரதமர் மோடி குற்றச்சாட்டு + "||" + In Pondicherry the Congress government has ravaged all sectors; Prime Minister Modi accused

புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு அனைத்து துறைகளையும் சீரழித்துவிட்டது; பிரதமர் மோடி குற்றச்சாட்டு

புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு அனைத்து துறைகளையும் சீரழித்துவிட்டது; பிரதமர் மோடி குற்றச்சாட்டு
புதுவையில் காங்கிரஸ் அரசு அனைத்து துறைகளையும் சீரழித்துள்ளது என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.
பொதுக்கூட்டம்
காரைக்காலில் ஜிப்மர் கிளை மருத்துவமனை உள்பட புதுச்சேரியில் ரூ.3 ஆயிரத்து 22 கோடியே 68 லட்சம் மதிப்பிலான திட்ட பணிகளை நேற்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.பின்னர் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் புதுவை லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானத்தில் நடந்தது. இந்தகூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மாறி வீசும் காற்று
புதுவையில் இப்போது காற்று மாறி வீசுகிறது. நான் உங்களை மகிழ்ச்சியுடன் பார்ப்பதற்கு 2 காரணங்கள் உள்ளன. அதில் ஒன்று புதுவை மேம்பாட்டுக்கான திட்டங்கள். மற்றொன்று புதுவை மக்கள் காங்கிரஸ் அரசின் மோசமான நிர்வாகத்தில் இருந்து விடுதலை பெற்றுள்ளனர்.கடந்த 2016-ம் ஆண்டு காங்கிரசை நம்பி வாக்களித்தனர். ஆனால் மக்கள் நம்பிக்கையை காங்கிரஸ் அரசு நிராசையாக்கி விட்டது. காங்கிரஸ் கட்சியின் மேல்மட்ட தலைவர்களுக்கு புதுவை காங்கிரஸ் அரசு சேவை செய்தது.காங்கிரஸ் கட்சி தலைமையின் செருப்பினை தூக்கத்தான் முதல்வர் அக்கறை காட்டினார். அவர் புதுவை மக்களின் பிரச்சினைகளை சரிசெய்யவில்லை.

அனைத்து துறைகளும் சீரழிவு
டெல்லியை சேர்ந்த ஒரு குழுவினர் புதுவையை ஆட்சி செய்தனர். வரும் தேர்தலுக்குப்பின் அமையும் அரசு புதுவை மக்கள் விரும்பும் ஆட்சியை கொடுக்கும். தேசிய ஜனநாயக கூட்டணி அரசானது மக்கள் சக்தியினால் உந்தப்பட்டதாக இருக்கும். புதுவை காங்கிரஸ் அரசு அனைத்து துறைகளையும் சீரழித்துள்ளது. மில்கள் மூடப்பட்டுள்ளன. உள்ளூர் தொழில்கள் சீரழிந்துள்ளன.

பொய் சொல்வதையே...
மத்திய அரசின் திட்டங்களையும் புதுவையில் நிறைவேற்றுவதில் அவர்கள் ஒத்துழைக்கவில்லை. கடல்சார் மீனவர்களுக்கான திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை. சில நாட்களுக்கு முன்பு ஒரு வீடியோ வெளியே வந்தது. அதில் ஒரு ஆதரவற்ற பெண் புதுவை முதல்-அமைச்சர் பற்றி குறை கூறினார். அவரது கண்களில், குரலில் வேதனை தெரிந்தது. ஆனால் அவர் சொல்வதை மறைத்து தனது தலைவரிடம் நாராயணசாமி தவறாக மொழி பெயர்த்து கூறினார். தனது தலைவரிடம் கூட பொய்யை கூறினார். பொய் சொல்வதையே கலாசாரமாக கொண்டவர்கள் காங்கிரசார். அவர்களால் மக்களுக்கு சேவையாற்ற முடியுமா?

புதுவை மக்கள் வாக்களிக்கும்போது முன்னேற்றத்தின் விரோதிகளான காங்கிரசை தூக்கி எறிய வேண்டும். புதுவையின் புகழை மீட்டெடுப்போம். அப்படி ஒரு ஆட்சி அமைய வாய்ப்பு தாருங்கள்.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

1. புதுச்சேரியில் இரவுநேர ஊரடங்கு? - கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பதில்
புதுச்சேரியில் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? என்பதற்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பதில் அளித்தார்.
2. புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி வாக்களித்தார்
புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தனது வாக்கை பதிவு செய்தார்.
3. புதுச்சேரியில் இன்று சட்டசபை தேர்தல்: 30 தொகுதிகளில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு
புதுச்சேரி சட்டசபை தேர்தல் இன்று நடக்கிறது. இதில் அங்குள்ள 30 தொகுதிகளில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்குகிறது.
4. சட்டமன்றத் தேர்தல்: புதுச்சேரி மாநிலத்தில் 144 தடை உத்தரவு அமல்
சட்டமன்றத் தேர்தலையொட்டி புதுச்சேரி மாநிலத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
5. புதுச்சேரி காங்கிரஸ் அரசுக்கு தொல்லை கொடுத்த பாஜகவை மக்கள் விடக்கூடாது - மு.க.ஸ்டாலின்
புதுச்சேரி காங்கிரஸ் அரசுக்கு தொல்லை கொடுத்த பாஜகவை மக்கள் விடக்கூடாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.