கட்சி விட்டு கட்சி மாறும் ஓடுகாலிகளை புறக்கணிக்க வேண்டும்; காமராஜ்நகர் தேர்தல் பிரசாரத்தில் நாராயணசாமி ஆவேசம்


கட்சி விட்டு கட்சி மாறும் ஓடுகாலிகளை புறக்கணிக்க வேண்டும்; காமராஜ்நகர் தேர்தல் பிரசாரத்தில் நாராயணசாமி ஆவேசம்
x
தினத்தந்தி 2 April 2021 12:06 AM GMT (Updated: 2 April 2021 12:06 AM GMT)

கட்சி விட்டு கட்சி மாறும் ஓடுகாலிகளை புறக்கணிக்க வேண்டும் என்று காமராஜ்நகர் தேர்தல் பிரசாரத்தில் நாராயணசாமி கூறினார்.

நாராயணசாமி பிரசாரம்

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி தொகுதி வாரியாக பிரசாரம் செய்து வருகிறார். நேற்று நெல்லித்தோப்பு சுப்பையா சிலை, சாரம் அவ்வை திடல், புறாக்குளம் ஆட்டோ ஸ்டாண்ட், ரெயின்போ நகர் பிரெஞ்சு கார்னர், சாய்பாபா திருமண நிலையம், கிரு‌‌ஷ்ணா நகர், கென்னடி கார்டன், சாமிபிள்ளைத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் பிரசாரம் மேற்கொண்டார்.

கட்சி மாறும் ஓடுகாலிகள்

பிரசாரத்தின்போது நாராயணசாமி பேசியதாவது:-

நெல்லித்தோப்பு தொகுதியை ஜான்குமார் எனக்காக விட்டுக்கொடுத்தார். நான் காங்கிரஸ் கட்சியின் தலைமையிடம் பேசி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் அவரை வேட்பாளராக நிறுத்தினேன். வெற்றி பெற்றவுடன் அவரின் செயல்பாடுகளில் மாறுதல் ஏற்பட்டது. தொகுதி மக்களை மதிக்காமல் உதாசீனம் செய்தார்.அதன் பின்னர் அரசியல் வியாபாரியாகவும் மாறிவிட்டார். சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வாக்காளர்கள் விலைக்கு வாங்கி எப்படியாவது வெற்றிபெற்று பதவிக்கு வந்தவுடன் பேரம் பேசி விற்றுவிட்டு ராஜினாமா செய்துவிடுவார்.

இப்படிப்பட்ட கட்சியை விட்டு கட்சிமாறும் ஓடுகாலிகள் உங்களுக்கு வேண்டுமா? கட்சி விட்டு கட்சிமாறும் வேட்பாளர் உங்களுக்கு வேண்டுமா? அல்லது 5 ஆண்டுகள் உங்களுக்காக உழைப்பவர் வேண்டுமா? என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டும்.

அரசியல் வியாபாரம்

பா.ஜ.க.வுக்கு வாக்களித்தால் அமைதிக்கு குந்தகம் ஏற்படும். பெண்கள், அரசு ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவார்கள். அறக்கட்டளை கம்பெனியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.புதுச்சேரியில் அரசியல் வியாபாரிகளை மக்கள் தண்டிப்பார்கள் என்ற நிலையை மக்கள் உருவாக்க வேண்டும்.

பா.ஜ.க.வுக்கு வாக்களித்தால் அமைதிக்கு குந்தகம் ஏற்படும். பெண்கள், அரசு ஊழியர்கள் என அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுவார்கள். அதனால் நீங்கள் ஒட்டுமொத்தமாக தேர்தல் முடியும் வரை விழிப்புடன் இருக்க வேண்டும். புதுச்சேரியில் அரசியல் வியாபாரம் நடக்கிறது. இது மாநிலத்திற்கு நல்லது கிடையாது.

பணத்திற்கு விலைபோகும் அரசியல் வியாபாரிகளை புறக்கணிக்க வேண்டும். மக்கள் தொடர்ந்து பணியாற்றி வரும் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு கை சின்னத்தில் ஓட்டு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story