மாவட்ட செய்திகள்

புதுவையில் புதிதாக 180 பேர் கொரோனா பாதிப்பு + "||" + Corona for 180 newcomers in Pondicherry

புதுவையில் புதிதாக 180 பேர் கொரோனா பாதிப்பு

புதுவையில் புதிதாக 180 பேர் கொரோனா பாதிப்பு
புதுவையில் புதிதாக 180 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டது.
புதுச்சேரி, ஏப்.5-
புதுவையில் புதிதாக 180 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மொத்த பாதிப்பு 42,539 ஆக உயர்ந்துள்ளது.
2,702 பேருக்கு பரிசோதனை
புதுவை மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இருப்பினும் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவும் வேகம் அதிகரித்து வருகிறது.
நேற்று    காலை  10  மணி யுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 702 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 180 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 95 பேர் குணமடைந்தனர்.
1,677 பேருக்கு தொடர் சிகிச்சை
மாநிலத்தில் இதுவரை 6 லட்சத்து 82 ஆயிரத்து 490 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 42 ஆயிரத்து 539 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 40 ஆயிரத்து 178 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 390 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 1,287 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதாவது 1,677 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.   இதுவரை  684 பேர் உயிரிழந்துள்ளனர்.
தடுப்பூசி 
நேற்று முன்தினம் சுகாதார பணியாளர்கள் 44 பேரும், முன்கள பணியாளர்கள் 9 பேரும், பொதுமக்கள் 374 பேரும் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். மாநிலத்தில் இதுவரை 80 ஆயிரத்து 629 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர் என்பது   குறிப்பிடத்தக்கது.