மாவட்ட செய்திகள்

புதுச்சேரியில் வாக்காளர்களை வரவேற்க 23 மாதிரி வாக்குச்சாவடிகள் + "||" + 23 sample polling booths to welcome voters in Pondicherry

புதுச்சேரியில் வாக்காளர்களை வரவேற்க 23 மாதிரி வாக்குச்சாவடிகள்

புதுச்சேரியில் வாக்காளர்களை வரவேற்க 23 மாதிரி வாக்குச்சாவடிகள்
புதுச்சேரியில் வாக்காளர்களை வரவேற்க 23 மாதிரி வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மாதிரி வாக்குச்சாவடிகள்
புதுவை சட்டமன்ற தேர்தலுக்கு இன்று (செவ்வாய்க் கிழமை) நடைபெற உள்ளது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் நிழற்பந்தல், குடிநீர் வசதி, கழிப்பறை உள்ளிட்ட தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகள் வாக்காளர்களை சக்கர நாற்காலியில் அழைத்துச்செல்ல ஏதுவாக தேவையான சாய்தளம் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஒவ்வொரு தொகுதியில் ஒரு மாதிரி வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

அலங்கார தோரணம்
இந்த வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களை வரவேற்கும் விதமான வாழைமரம், பலூன், தென்னங்கீற்று உள்ளிட்ட பல்வேறு அலங்கார தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன.மேலும் வாக்காளர்களுக்கு சிறப்பு 
கம்பள வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.