மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனத்தில் வந்து ரங்கசாமி ஓட்டுப் போட்டார் ;‘வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது’ + "||" + Rangasamy came in a two-wheeler and drove away

இருசக்கர வாகனத்தில் வந்து ரங்கசாமி ஓட்டுப் போட்டார் ;‘வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது’

இருசக்கர வாகனத்தில் வந்து ரங்கசாமி ஓட்டுப் போட்டார் ;‘வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது’
இரு சக்கர வாகனத்தில் வந்து ரங்கசாமி ஓட்டுப் போட்டார். அப்போது அவர் கூறுகையில் எங்கள் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக தெரிவித்தார்.

மோட்டார் சைக்கிளில் வந்தார்

சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தட்டாஞ்சாவடி, ஏனாம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். புதுவை திலாசுப்பேட்டை விநாயகர் கோவில் வீதியில் உள்ள தனது வீட்டில் இருந்து நேற்று காலை இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார்.

அங்கு அரசு நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடிக்கு சென்று அவர் ஓட்டுப் போட்டார். அதன்பின் தான் போட்டியிடும் தட்டாஞ்சாவடி தொகுதியில் சில வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்குப்பதிவு நடைபெறுவதை பார்வையிட்டார்.

பின்னர் நிருபர்களிடம் ரங்கசாமி கூறியதாவது:-

பிரகாசமான வெற்றி வாய்ப்பு

நான் போட்டியிடும் தட்டாஞ்சாவடி தொகுதியில் வாக்குச்சாவடிகளுக்கு சென்று பாா்வையிட்டேன். ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மக்கள் ஆா்வமுடன் வாக்களித்து வருகிறாா்கள். இந்த தோ்தலில் எங்கள் கூட்டணி கட்சிகள் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை உள்ளது. நான் தட்டாஞ்சாவடி தொகுதியில் நிச்சயம் வெற்றி பெறுவேன்.

கடந்த ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இது மக்கள் அனைவருக்கும் தொியும். இதையெல்லாம் அவர்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். எனவே என்.ஆா்.காங்கிரஸ், பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. எங்கள் கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்.

இவ்வாறு அவா் கூறினாா்.


தொடர்புடைய செய்திகள்

1. மே. வங்காளத்தில் திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகி வீட்டில் 4 இவிஎம் இயந்திரங்கள்; தேர்தல் அதிகாரி சஸ்பெண்ட்
மேற்கு வங்காளத்தில் திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகி வீட்டில் 4 இவிஎம் இயந்திரங்கள் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
2. 12 மணி நிலவரம்: அசாம் 33.18%, மே.வங்காளம் 34.71 % வாக்குகள் பதிவு
தமிழகம் உள்பட 4 மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் இன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது.
3. புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்: காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 14 வேட்பாளர்களின் பட்டியல் வெளியீடு
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 14 வேட்பாளர்களின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
4. புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்
புதுவை சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
5. புதுவையில் நீண்ட இழுபறிக்கு பின் உடன்பாடு: என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகள் ஒதுக்கீடு பா.ஜ.க., அ.தி.மு.க. 14 தொகுதிகளில் போட்டி
புதுவையில் கூட்டணி பேச்சுவார்த்தையில் நீண்ட இழுபறிக்கு பின் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 16 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 14 இடங்களை பா.ஜ.க., அ.தி.மு.க. பிரித்துக்கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.