மாவட்ட செய்திகள்

தூக்கில் பிணமாக தொங்கிய தொழிலாளி சாவில் சந்தேகம் இருப்பதாக மனைவி புகார் + "||" + Worker hanging from the gallows That death is suspected Wife complains

தூக்கில் பிணமாக தொங்கிய தொழிலாளி சாவில் சந்தேகம் இருப்பதாக மனைவி புகார்

தூக்கில் பிணமாக தொங்கிய தொழிலாளி சாவில் சந்தேகம் இருப்பதாக மனைவி புகார்
வில்லியனூர் புதுபேட், தூக்கில் பிணமாக தொங்கிய தொழிலாளி சாவில் சந்தேகம் இருப்பதாக மனைவி புகார் அளித்துள்ளார்
வில்லியனூர், 

வில்லியனூர் புதுபேட் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 50). கூலித்தொழிலாளி. இவரது மனைவி மல்லிகா. இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்ற மணிவண்ணன் நீண்டநேரமாகியும் வரவில்லை.

இதற்கிடையே ரங்கசாமி நகரில் உள்ள ஆலமரத்தில் மணிவண்ணன் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வில்லியனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மல்லிகா வில்லியனூர் போலீசில் புகார் கொடுத்தார். அதில் தனது கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவரை யாரேனும் அடித்துக் கொலை செய்திருக்கலாம் என்றும் கூறியுள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.