மாவட்ட செய்திகள்

வெப்ப சலனம் காரணமாக புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் + "||" + Chance of rain in Pondicherry due to heat wave: Meteorological Center Information

வெப்ப சலனம் காரணமாக புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

வெப்ப சலனம் காரணமாக புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
வெப்ப சலனம் காரணமாக புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் நா.புவியரசன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

வெப்பச்சலனம்
வெப்பச்சலனம் காரணமாக 8-ந் தேதி (இன்று) மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், 9-ந் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். 10-ந் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் 
புதுச்சேரியில் லேசான மழையும், 11-ந் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு (இன்றும், நாளையும்) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை
இன்று முதல் 11-ந் தேதி வரை மன்னார் வளைகுடா மற்றும் தெற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். 9-ந் தேதி (நாளை), 10-ந் தேதி (நாளை மறுதினம்) மத்திய வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். 11-ந் தேதி மத்திய வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கி.மீ. 
வேகத்தில் வீசக்கூடும். 10-ந் தேதி, 11-ந் தேதிகளில் கேரளா, கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். 11-ந் தேதி வரை தென் மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இந்த தேதிகளில், அந்த பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என 
அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மும்பை உள்பட மாநிலத்தின் ஒரு சில பகுதிகளில் 2 நாட்களுக்கு மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்
மும்பை உள்பட மாநிலத்தில் ஒரு சில பகுதிகளில் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
2. கேரளாவில் தென்மேற்கு பருவமழை நாளை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்
கேரளாவில் தென்மேற்கு பருவமழை நாளை துவங்க சாதகமான சூழல் நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3. வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் 4 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாகவும், தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
4. அந்தமான் பகுதிகளில் நாளை உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுவடைகிறது; வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தின் சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்தாலும், தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் அந்தமான் பகுதியில் தென்மேற்கு பருவமழை இன்று (வெள்ளிக்கிழமை) உருவாகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
5. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்து உள்ளது. சென்னை

அதிகம் வாசிக்கப்பட்டவை