மாவட்ட செய்திகள்

2 மணல்வாரி கப்பல்கள் மூலம் புதுச்சேரி துறைமுகம் தூர்வாரும் பணி + "||" + Pondicherry port dredging by 2 sand dredgers

2 மணல்வாரி கப்பல்கள் மூலம் புதுச்சேரி துறைமுகம் தூர்வாரும் பணி

2 மணல்வாரி கப்பல்கள் மூலம் புதுச்சேரி துறைமுகம் தூர்வாரும் பணி
2 மணல்வாரி கப்பல்கள் மூலம் துறைமுக முகத்துவாரம் தூர்வாரும் பணி தொடங்கி உள்ளது.
மணல் திட்டு
புதுவை துறைமுக முகத்துவாரத்தின் வழியாக மீனவர்கள் படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர். இங்கு அடிக்கடி மணல் தேங்கி திட்டு உருவாவதால் படகுகள் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. சில நேரங்களில் மணல் திட்டுகளில் படகுகள் கரை தட்டி நின்று விடுகிறது. இதனால் சாகர்மாலா திட்டத்தின் கீழ் துறைமுக முகத் துவாரம் பகுதியை ரூ.27 கோடியே 50 லட்சம் செலவில் தூர்வார திட்டமிடப்பட்டது. அதாவது 7.30 லட்சம் கியூபிக் மீட்டர் மணல் தூர்வார ஒப்பந்தம் விடப்பட்டது. ஐதராபாத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் இந்த ஒப்பந்தத்தை எடுத்துள் ளது.

தூர்வாரும் பணி
அதன்படி முகத்துவாரம் தூர்வாரும் பணிகளை கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து தற்போது 2 மணல்வாரி கப்பல்கள் மூலம் முகத்துவாரம் தூர்வாரும் பணி தொடங்கியுள்ளது. இதற்கிடையே தூர்வாரப்படும் மணல் ராட்சத குழாய்கள் வழியாக எடுத்து வரப்பட்டு ஓட்டல் அருகே கொட்டப்படுகிறது. அதாவது இந்த பகுதியில் மட்டும் 5.2 லட்சம் கியூபிக் மீட்டர் மணல் கொட்டப்படுகிறது. இதுமட்டுமின்றி 2.1 லட்சம் லட்சம் கியூபிக் மீட்டர் மணல், முகத்துவாரம் பகுதியில் இருந்து சற்று தொலைவில் கொட்டப்படுகிறது. இவ்வாறு கொட்டப்படும் மணலால் 
காந்திசிலை முதல் தலைமை செயலகம் வரை அழகிய மணல் பரப்பு உருவாக வாய்ப்பு உள்ளது. கடல் அரிப்பும் தடுக்கப்படும். இந்த பணிகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை