மாவட்ட செய்திகள்

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 642 பேருக்கு கொரோனா பாதிப்பு + "||" + In Puducherry 642 people were affected by corona in the last 24 hours

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 642 பேருக்கு கொரோனா பாதிப்பு

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 642 பேருக்கு கொரோனா பாதிப்பு
புதுச்சேரியில் தற்போது 6,853 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுச்சேரி, 

புதுச்சேரி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 8,516 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டதில் 642 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் புதுச்சேரி - 496, காரைக்கால் - 110, ஏனாம் - 22, மாஹே - 14  என மொத்தம் 642 (7.54 சதவீதம்) பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் புதுச்சேரியில் இதுவரை 1 லட்சத்து 10 ஆயிரத்து 748 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

புதுச்சேரியில் மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,648 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.49 சதவீதமாக உள்ளது. தற்போது புதுச்சேரியில் மொத்தம் 6,853 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 932 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 02 ஆயிரத்து 247 (92.32 சதவீதம்) ஆக உள்ளது. இதுவரை சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 2 லட்சத்து 97 ஆயிரத்து 542 பேருக்கு (2-வது டோஸ் உட்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக புதுச்சேரி சுகாதாரத்துறை தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 545 பேருக்கு கொரோனா பாதிப்பு
புதுச்சேரியில் தற்போது 7,147 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. புதுச்சேரியில் ஊரடங்கில் இன்று முதல் மேலும் தளர்வுகள்
புதுச்சேரியில் ஊரடங்கில் மேலும் தளர்வுகள்அளிக்கப்பட்டுள்ள நிலையில் மளிகை, மதுக்கடைகள் மாலை 5 மணி வரை செயல்படலாம். பஸ்களை இயக்கவும், வழிபாட்டுதலங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
3. புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து: முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு
தமிழகத்தை பின்பற்றி புதுச்சேரியிலும் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
4. புதுச்சேரியில் ஊரடங்கில் மேலும் தளர்வுகள்? - இன்று அறிவிப்பு வெளியாகும்
புதுச்சேரியில் ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அளிக்கப்படும் என்று தெரிகிறது. இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகிறது.
5. மராட்டிய மாநிலத்தில் இன்று 12,557 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
மராட்டிய மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 14,433 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.