மாவட்ட செய்திகள்

பெற்ற தாயை குத்திக் கொன்ற பயங்கரம் + "||" + The horror of stabbing the adoptive mother

பெற்ற தாயை குத்திக் கொன்ற பயங்கரம்

பெற்ற தாயை குத்திக் கொன்ற பயங்கரம்
அரியாங்குப்பத்தில் பெற்ற தாய் என்றும் பாராமல் கத்தியால் குத்திக் கொன்ற வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
அரியாங்குப்பம், ஜூன்.15-
அரியாங்குப்பத்தில் பெற்ற தாய் என்றும் பாராமல் கத்தியால் குத்திக் கொன்ற வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
கத்திக்குத்து
புதுச்சேரி அரியாங்குப்பம் அருந்ததிபுரம் பெரிய இருசாம்பாளையம் ரோடு பகுதியை சேர்ந்தவர் சிவா (வயது 50). இவரது மனைவி வசந்தா(45). இவர்களுக்கு விஷ்ணு (27) என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர். இதில் 2 மகள்களுக்கும் திருமணம் முடிந்து குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
இந்தநிலையில் கடந்த 12-ந்தேதி விஷ்ணுவுக்கும், வசந்தாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரத்தில் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து பெற்ற தாய் என்றும் பாராமல் வசந்தாவின் வயிறு, கழுத்து பகுதியில் குத்திவிட்டு விஷ்ணு தப்பியோடி விட்டார்.
மயங்கி விழுந்தார்
இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை முடிந்து வசந்தா வீடு திரும்பினார்.
இந்தநிலையில்    நேற்று முன்தினம் வசந்தாவுக்கு வயிற்றுப்பகுதியில் வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து மீண்டும் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே வசந்தா இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
பரபரப்பு
இதுகுறித்து அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசெல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். தப்பியோடிய விஷ்ணுவை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். 
இந்தநிலையில் உடல்நிலை சரியில்லாமல் அரசு ஆஸ்பத்திரியில் விஷ்ணு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. குணமடைந்த பிறகு அவரை கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.
தாயை, மகனே குத்திக் கொலை செய்த பயங்கர சம்பவம் அரியாங்குப்பம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.