மாவட்ட செய்திகள்

புதுச்சேரியில் சற்று குறைந்த கொரோனா பாதிப்பு; இன்று 126 பேருக்கு தொற்று உறுதி + "||" + Today 126 people are confirmed infected in Puducherry

புதுச்சேரியில் சற்று குறைந்த கொரோனா பாதிப்பு; இன்று 126 பேருக்கு தொற்று உறுதி

புதுச்சேரியில் சற்று குறைந்த கொரோனா பாதிப்பு; இன்று 126 பேருக்கு தொற்று உறுதி
புதுச்சேரியில் தற்போது 1,695 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுச்சேரி,

புதுச்சேரி சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 126 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் 155 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்த நிலையில், இன்று பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இதில் புதுச்சேரியில் 103 பேர், காரைக்காலில் 6 பேர், மாஹேவில் 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதன் மூலம் புதுச்சேரியில் இதுவரை பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 1,18,697 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், புதுச்சேரியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,768 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 192 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,15,234 ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் தற்போது 1,695 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. 1000 கிலோ மீன், 200 கிலோ இறால்; 10 ஆடுகள்;மருமகனுக்கு சீர் செய்த மாமனார்
ஆயிரம் கிலோ மீன், 200 கிலோ இறால்கள், 10 ஆடுகள், 50 கிலோ கோழி, ஆயிரம் கிலோ காய்கறிகள் என அடுக்கடுக்காய் சீர் கொடுத்து மருமகனை, மாமனார் ஆச்சரியப்படுத்தினார்.
2. புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 100 பேருக்கு கொரோனா பாதிப்பு
புதுச்சேரியில் தற்போது 1,124 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
3. புதுச்சேரியில் 100-க்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை
புதுச்சேரியில் தற்போது 1,170 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
4. புதுச்சேரியில் 11 குழந்தைகள் உள்பட 94 பேருக்கு கொரோனா பாதிப்பு
புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 94 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. புதுச்சேரியில் நேற்று 104 பேருக்கு கொரோனா; 161 பேர் டிஸ்சார்ஜ்
புதுச்சேரியில் தற்போது 1,248 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.