மாவட்ட செய்திகள்

புதுச்சேரி அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு செய்து அரசிதழில் வெளியீடு + "||" + Allocation of portfolios for Puducherry Ministers

புதுச்சேரி அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு செய்து அரசிதழில் வெளியீடு

புதுச்சேரி அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு செய்து அரசிதழில் வெளியீடு
கூட்டுறவுத்துறை, சுகாதாரம், வருவாய், உள்ளாட்சி நிர்வாகம், பொது நிர்வாகம், அறநிலையத்துறை உள்ளிட்ட துறைகள் முதல்வர் ரங்கசாமிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
புதுவை,

புதுச்சேரி அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு செய்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு 

முதல்வர் ரங்கசாமி- கூட்டுறவுத்துறை, சுகாதாரம், வருவாய், உள்ளாட்சி நிர்வாகம், பொது நிர்வாகம், அறநிலையத்துறை உள்ளிட்ட துறைகள்

*சந்திர பிரியங்கா- போக்குவரத்து, ஆதிதிராவிடர் நலன், வீட்டு வசதித்துறை ஒதுக்கீடும் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு, கலை கலாசாரம் பொருளாதாரம் புள்ளியியல் துறையும் ஒதுக்கீடு

*நமச்சிவாயம்- உள்துறை, மின்சாரம், தொழில் மற்றும் வர்த்தகத்துறை ஒதுக்கீடு, கல்வித்துறை விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் உள்ளிட்ட துறைகளும் நமச்சிவாயத்திற்கு ஒதுக்கீடு

*லட்சுமி நாராயணன் - பொதுப்பணித்துறை சுற்றுலா, மீன்வளத்துறை, சட்டம், தகவல் தொழில்நுட்பம் ஒதுக்கீடு

*தேனி ஜெயக்குமார்- வேளாண், கால்நடை பராமரிப்பு, சமூக நலன், வனம், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை உள்ளிட்ட துறைகள்

*சாய் சரவணன் குமார்- உணவு மற்றும்  நுகர்வோர் துறை, சிறுபான்மை நலன் ஆகிய துறைகள் ஒதுக்கீடு