மாவட்ட செய்திகள்

புதுச்சேரியில் நேற்று 177 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர் + "||" + In Pondicherry yesterday 177 people recovered from corona

புதுச்சேரியில் நேற்று 177 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்

புதுச்சேரியில் நேற்று 177 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்
புதுச்சேரியில் தற்போது 1,327 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுச்சேரி,

புதுச்சேரி சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் புதுச்சேரியில் 93 பேர், காரைக்காலில் 18 பேர், மாஹேவில் 5 பேர், ஏனாமில் 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதன் மூலம் புதுச்சேரியில் இதுவரை பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 1,19,302 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். இதனால் புதுச்சேரியில் பதிவான மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,772 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 177 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,16,203 ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் தற்போது 1,327 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. புதுச்சேரில் கடந்த 24 மணி நேரத்தில் 124 பேருக்கு கொரோனா
புதுச்சேரியில் தற்போது 1,695 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
2. புதுச்சேரியில் இலவச கல்வி திட்டத்தை விரைவில் அமல்படுத்த வேண்டும்: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர்
தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணை தலைவர் அருண் ஹால்டர் புதுவை வந்தார். அவருடன் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தமிழ்நாடு இயக்குனர் சுனில்குமார்பாபு, முதுநிலை ஆய்வாளர் லிஸ்டர், ஆலோசகர் ராமசாமி ஆகியோர் வந்தனர்.
3. புதுச்சேரியில் வரும் 16-ம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறப்பு - முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு
புதுச்சேரியில் 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கு வரும் 16-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
4. ரஷ்யாவில் ஒரே நாளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 752 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
5. டெல்லியில் இன்று 76 பேருக்கு கொரோனா; 81 பேர் டிஸ்சார்ஜ்
டெல்லியில் தற்போது 798 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.