மாநில செய்திகள்

நவீன கருவிகள் பொருத்திய மிதவை + "||" + Modern tools fitted hover

நவீன கருவிகள் பொருத்திய மிதவை

நவீன கருவிகள் பொருத்திய மிதவை
கடல் நீரின் தன்மையை அறிய நவீன கருவிகள் பொருத்திய மிதவை புதுச்சேரி கடலுக்குள் நிறுவப்பட்டுள்ளது. இதன் பயன்பாட்டை ரங்கசாமி நேற்று தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி, 

மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சத்தின் கீழ் இயங்கும் தேசிய கடலோர ஆராய்ச்சி மையம் கடல் நீரின் தன்மையை உடனடியாக அறியும் திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்தி வருகிறது. புதுச்சேரி அரசின் வேண்டுகோளுக்கிணங்க இந்த திட்டத்தை புதுவை மாநிலத்தில் செயல்படுத்துவதற்காக நவீன கருவிகள் பொருத்திய மிதவையை புதுச்சேரி துறைமுகத்தில் இருந்து 1½ கி.மீ. தொலைவில் தேசிய கடலோர ஆராய்ச்சி மையம் நிறுவியுள்ளது.
இந்த கருவியின் மூலம் புதுச்சேரி கடலோர பகுதி நீரின் தன்மையும், வளமும் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படும். இதன் மூலம் கடலோரம் மாசடைவதை தடுக்கும் திட்டங்களுக்கும், மீன் வளம் மற்றும் கடலோர சுற்றுலா வளர்ச்சி திட்டங்களுக்கும் தேவையான தகவல்கள் தொடர்ச்சியாக பெறப்படும்.

ரங்கசாமி தொடங்கி வைத்தார்

இந்த திட்டத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நேற்று காலை சட்டசபை வளாகத்தில் உள்ள முதல்-அமைச்சர் அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு மிதவையின் செயல்பாட்டை கணினி மூலம் தொடங்கி வைத்து அதில் இருந்து பெறப்படும் தகவல்களை தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தின் இணையதளம் வாயிலாக பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில்    அறிவியல் தொழில்நுட்பம்       மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலாளர் ஸ்மித்தா, இயக்குனர் தினேஷ் கண்ணன், சென்னை தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் ரமண மூர்த்தி, விஞ்ஞானி பிராவக்கர் மிஸ்ரா  மற்றும்  பலர் கலந்து கொண்டனர்.