மாவட்ட செய்திகள்

புதுச்சேரியில் இன்று 98 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு + "||" + 98 people infected with corona in Puducherry today

புதுச்சேரியில் இன்று 98 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

புதுச்சேரியில் இன்று 98 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
புதுச்சேரியில் தற்போது 972 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுச்சேரி,

புதுச்சேரி சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 98 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் புதுச்சேரியில் 72 பேர், காரைக்காலில் 20 பேர், மாஹேவில் 5 பேர், ஏனாமில் ஒரு நபரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதன் மூலம் புதுச்சேரியில் இதுவரை பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 1,20,725 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. புதுச்சேரியில் பதிவான மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,792 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 49 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,17,961 ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் தற்போது 972 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. புதுச்சேரியில் புதிதாக 103 பேருக்கு கொரோனா பாதிப்பு!
புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 103 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. புதுச்சேரியில் புதிதாக 103 பேருக்கு கொரோனா பாதிப்பு
புதுச்சேரியில் தற்போது 858 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. புதுச்சேரியில் இன்று கொரோனா பாதிப்பு 50-க்கும் கீழ் குறைந்தது
புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 46 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. புதுச்சேரி - விநாயகர் சதுர்த்தி நெறிமுறைகள் வெளியீடு
புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பொது இடங்களில் சிலை வைப்பது தொடர்பாக, வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.
5. புதுச்சேரியில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதுச்சேரியில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.