மாநில செய்திகள்

தனியார் நிறுவனத்தை சி.ஐ.டி.யு.வினர் முற்றுகையிட முயற்சி + "||" + Attempt to besiege CITU

தனியார் நிறுவனத்தை சி.ஐ.டி.யு.வினர் முற்றுகையிட முயற்சி

தனியார் நிறுவனத்தை சி.ஐ.டி.யு.வினர் முற்றுகையிட முயற்சி
சேதராப்பட்டில் தனியார் நிறுவனத்தை சி.ஐ.டி.யு.வினர் முற்றுகையிட முயன்றனர். அப்போது போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேதராப்பட்டில் தனியார் நிறுவனத்தை சி.ஐ.டி.யு.வினர் முற்றுகையிட முயன்றனர். அப்போது போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஊழியர்கள் பணிநீக்கம்
புதுவை சேதராப்பட்டில் பிரபல ஷூ தயாரிக்கும் தனியார் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் தயாரிக்கப்படும் ஷூக்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்கு சுமார் 120-க்கும் ேமற்பட்ட ஊழியர்கள்   பணியாற்றி வருகின்றனர்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, இங்கு பணிபுரிந்த 15 ஊழியர்கள் முன்னறிவிப்பின்றி நிர்வாகத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்ற தொழிலாளர்கள் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இதனை அறிந்த நிர்வாகம் மற்ற ஊழியர்களையும் பணிக்கு அனுமதிக்கவில்லை என்று தெரிகிறது.
போலீசாருடன் தள்ளுமுள்ளு
இந்தநிலையில் நேற்று சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் மாநில தலைவர் முருகன் தலைமையில் ஊழியர்கள், சேதராப்பட்டு மும்முனை சந்திப்பு சாலையில் இருந்து அந்த நிறுவனத்துக்கு ஊர்வலமாக வந்து முற்றுகையிட முயன்றனர். அப்போது கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் அந்த நிறுவனத்துக்கு அருகில் தடுப்புகளை அமைத்து ஊர்வலமாக வந்தவர்களை தடுத்து நிறுத்தினர்.
இருப்பினும்     போராட் டக்காரர்கள் தடுப்புகளை மீறி முன்னேற முயன்றனர். இதனால் போலீசாருக்கும், போராட்டகாரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து   போராட்டகாரர்கள் அங்கேயே மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 95 ேபரை போலீசார் கைது  செய்து அங்குள்ள தனியார் மண்டபத்தில்   தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.