மாநில செய்திகள்

தனியார் நிதி நிறுவன அதிகாரி சிறையில் அடைப்பு + "||" + Private financial institution official jailed

தனியார் நிதி நிறுவன அதிகாரி சிறையில் அடைப்பு

தனியார் நிதி நிறுவன அதிகாரி சிறையில் அடைப்பு
புதுவையில் ரூ.5 கோடி மோசடி செய்ததாக கைதான தனியார் நிதி நிறுவன அதிகாரியை காவலில் எடுத்து போலீசார் விசாரிக்க உள்ளனர்.
புதுவையில் ரூ.5 கோடி மோசடி செய்ததாக கைதான தனியார் நிதி நிறுவன அதிகாரியை காவலில் எடுத்து போலீசார் விசாரிக்க உள்ளனர். 
கவர்ச்சி விளம்பரம்
கோவையை தலைமையிடமாக கொண்ட தனியார் நிதி நிறுவனத்தின் கிளை புதுவை இந்திராகாந்தி   சதுக்கம் அருகே ஒரு கட்டிடத்தில் இயங்கி வந்தது. இங்கு முதலீடு செய்தால் 10 மாதத்தில் இரட்டிப்பு பணம் தருவதாக கவர்ச்சி விளம்பரம் செய்யப்பட்டது.
இதனை உண்மை   என நம்பிய லாஸ்பேட்டை சாமிபிள்ளை தோட்டம், நவமணி நகரை சேர்ந்த வேல்முருகன் என்பவரது மனைவி சுதா (வயது 38) மற்றும்   அவரது உறவினர்கள் ரூ.40 லட்சம் முதலீடு செய்தனர்.
இதேபோல்     தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த பலரும் லட்சக்கணக்கில் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென்று அந்த நிறுவனம் மூடப்பட்டது. 
போலீசில் புகார்
இதுபற்றி  அறிந்து  சுதா உள்ளிட்ட முதலீடு செய்தவர்கள் புதுவை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இந்த வகையில் இரட்டிப்பு பணம் தருவதாக முதலீடுகள் பெற்று ரூ.5 கோடி வரை அந்த நிதி நிறுவனம் மோசடி செய்து இருப்பது தெரியவந்தது.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த நிதி நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் ரமேஷ் (வயது 34) தமிழ்நாட்டில் மோசடி வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதனை     தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி.      போலீஸ்  இன்ஸ் பெக்டர் நியூட்டன் மற்றும் போலீசார் கோர்ட்டில் அனுமதிபெற்று சேலம் சென்று ரமேசை    கைது  செய்து புதுச்சேரி அழைத்து வந்தனர். 
கோர்ட்டில் மனு
பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். இதையடுத்து மோசடி   தொடர்பாக ரமேசை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். 
இதற்காக கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். கோர்ட்டு உத்தரவிட்டதும் ரமேசை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். 
இதற்கிடையே இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் புகார் தெரிவிக்கலாம் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்துள்ளனர்.