மாநில செய்திகள்

தொழிலாளி வீடு முன் வெடிகுண்டு வீசிய 3 பேர் சிக்கினர் + "||" + 3 people were caught throwing the bomb

தொழிலாளி வீடு முன் வெடிகுண்டு வீசிய 3 பேர் சிக்கினர்

தொழிலாளி வீடு முன் வெடிகுண்டு வீசிய 3 பேர் சிக்கினர்
தொழிலாளி வீடு முன் வெடிகுண்டு வீசிய 3 பேரை பிடித்து போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொழிலாளி வீடு முன் வெடிகுண்டு வீசிய 3 பேரை பிடித்து போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெடிகுண்டு வீச்சு
புதுச்சேரியை அடுத்த கொம்பாக்கம்- வில்லியனூர் ரோட்டில் உள்ள பால் சொசைட்டி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 29). கூலித்தொழிலாளி. இவரது வீட்டின் முன் நேற்று முன்தினம் இரவு பயங்கர சத்தத்துடன் நாட்டு வெடிகுண்டு வெடித்து சிதறியது.
இதுபற்றி தகவல் அறிந்த முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரித்தனர்.
கடையில் திருட முயற்சி
கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் உள்ள ஒரு கடையின் பூட்டை உடைத்து 3 பேர் திருட முயன்றனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த சக்திவேல் உள்பட சிலர் அவர்களை பிடிக்க முயன்றனர். 
 இதில் ஒருவன்  மட்டும்    சிக்கினான். மற்ற 2 பேர் தப்பி ஓடிவிட்டனர்.பிடிபட்ட நபரை முதலியார்பேட்டை போலீசில் பொதுமக்கள் ஒப்படைத்தனர். 18 வயதுக்கு உட்பட்ட சிறுவன் என்பதால் அவன் மீது நடவடிக்கை எடுக்காமல் எச்சரித்து போலீசார் அனுப்பி வைத்தனர்.
3 பேர் சிக்கினர்
இந்தநிலையில் அந்த கும்பல் தனது நண்பர்களுடன் சேர்ந்து சக்திவேலை மிரட்டும் வகையில் அவரது வீட்டின் முன் வெடிகுண்டு வீசியுள்ளனர். 
தொடர்ந்து நடத்திய விசாரணையில், வெடிகுண்டு வீசியவர்கள் அரியாங்குப்பத்தை சேர்ந்த பிரகாஷ் உள்பட 3 பேர் என்பது தெரியவந்தது. போலீசார் தேடி வந்த நிலையில் அவர்கள் தற்போது சிக்கியுள்ளனர். ரகசிய இடத்தில் வைத்து 3 பேரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.