மாவட்ட செய்திகள்

மோடியின் கைப்பாவையாக செயல்படுகிறது, ரங்கசாமி அரசு: புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி + "||" + Acting as a puppet of Modi, the Rangasamy government

மோடியின் கைப்பாவையாக செயல்படுகிறது, ரங்கசாமி அரசு: புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி

மோடியின் கைப்பாவையாக செயல்படுகிறது, ரங்கசாமி அரசு: புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி
மோடியின் கைப்பாவையாக செயல்படுகிறது, ரங்கசாமி அரசு என்று நாராயணசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரி, ஜூலை.

மோடியின் கைப்பாவையாக செயல்படுகிறது, ரங்கசாமி அரசு என்று நாராயணசாமி கூறியுள்ளார்.

புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

வரலாறு காணாதது
அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புக்கு பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என பல மாநிலங்கள் வலியுறுத்தி வந்தன. இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் தி.மு.க.வும், பல மாநில அரசுகளும் நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்தன. புதுவை மாநிலத்திலும் நாங்கள் வலியுறுத்தி வந்தோம். இந்தநிலையில் மருத்துவப் படிப்புக்கு மத்திய தொகுப்புக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது வரலாறு காணாத முடிவு. இதை வரவேற்கிறோம். இதனால் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு வாய்ப்பு உருவாகும்.

புதிய கல்விக்கொள்கை
மத்தியில் ஆளும் மோடி அரசு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு புதிய கல்விக்கொள்கையை அறிவித்து நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்தது. அப்போது புதுவையில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது அதற்கு எதிராக ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அரசின் கொள்கை, மக்களின் எண்ணம் புதுவை மாநிலத்தில் தமிழ் முதல் மொழியாகவும், ஆங்கிலம் இணைப்பு மொழியாகவும் இருக்கலாம். இந்தியை கட்டாய மொழியாக உருவாக்கி தமிழை விருப்ப பாடமாக மாற்றுவதை ஏற்க முடியாது. இது தமிழுக்கு மத்திய அரசு செய்யும் துரோகம். எனவே தான் நாங்கள் எதிர்த்தோம்.

கூட்டணிக்காக மாற்றி பேசுகிறார்
நேற்று (நேற்று முன்தினம்) பிரதமர் மோடி காணொலி காட்சி மூலமாக அனைத்து மாநில முதல்-அமைச்சர்கள், கவர்னர்களுடன் புதிய கல்விக்கொள்கை கொண்டு வரப்பட்டு ஓராண்டு நிறைவு குறித்து பேசினார். அப்போது அவர், வளர்ச்சிக்கு வித்தாகவும், வேலைவாய்ப்பை உருவாக்கவும், விஞ்ஞான யுத்தியை கடைப்பிடிக்கவும் புதிய கல்வி கொள்கை சரியாக இருக்கும் எனத்தெரிவித்தார். இதில் எதுவும் உண்மையில்லை.
எதிர்க்கட்சி தலைவராக ரங்கசாமி இருந்தபோது, புதுவை அரசு ஏகமனதாக நிறைவேற்றிய புதிய கல்விக்கொள்கையை ஏற்காது என்பதை ஏற்றுக்கொண்டார். ஆனால் இப்போது பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இருப்பதால் ரங்கசாமி மாற்றிப் பேசுகிறார். 

அரசுக்கு முதுகெலும்பு வேண்டும்
முதல்-அமைச்சர் ரங்கசாமி இந்தியை முதல் மொழியாக ஏற்றுக்கொள்கிறாரா? தமிழை விருப்ப பாடமாக ஏற்றுக்கொள்கிறாரா? ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருக்க வேண்டாம் என சொல்கிறாரா?
புதுவை மாநிலத்தில் இந்தியில் கோப்புகளை எழுதி அனுப்ப முடியுமா? பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகத்தில் இந்தியை முதன்மை மொழியாக வைத்து மாணவர்களுக்கு கல்வி கற்றுத்தர முடியுமா? என பல்வேறு கேள்விகள் எழுகிறது. அரசுக்கு முதுகெலும்பு வேண்டும்.மக்கள் ஏற்றுக்கொள்ளாத கொள்கைகளை மத்திய அரசு நமக்கு ஆதரவான அரசாக இருந்தாலும் எதிர்க்க வேண்டும். மக்களின் உரிமை தான் முக்கியம். புதுவையில் ஆளும் ரங்கசாமி அரசு, மோடி அரசின் கைப்பாவையாக செயல்படுகிறது. இது புதுவை மாநில மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிவிடும். இந்தி முதன்மை மொழியாக வந்தால் அகில இந்திய அளவில் மாணவர்கள் போட்டி போட்டுக்கொண்டு முன்னேறுவது மிகவும் சிரமமான விஷயம். 
புதுவை அரசு மத்திய அரசின் கல்வி கொள்கையை மாநிலத்திற்கு ஏற்ப மாற்றி அமைக்க வலியுறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

சர்வாதிகார போக்கு
செல்போன் ஒட்டுகேட்பு விவகாரத்தில் தங்கள் மீது குற்றமில்லை என்றால், மோடி அரசு ஏன் விசாரணையை தடுத்து நிறுத்த வேண்டும். நாடாளுமன்ற விவாதத்தை ஏன் நடத்தமாட்டோம் எனக்கூறுகிறார்கள். இதன் மூலம் மோடியின் சர்வாதிகார போக்கு தெளிவாக தெரிகிறது. புதுவையில் நிர்வாக கோளாறு உள்ளது. 3-வது அலையை தடுக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.