மாநில செய்திகள்

கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் தற்கொலை + "||" + 3 people commit suicide including a college student

கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் தற்கொலை

கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் தற்கொலை
வெவ்வேறு சம்பவங்களில் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
வெவ்வேறு சம்பவங்களில் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
கல்லூரி மாணவர்
மூலக்குளம் மேட்டுப்பாளையம் அடுத்த தர்மாபுரி நடுத்தெரு குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். கட்டிட தொழிலாளி. இவரது இளைய மகன் குருதேவன் (வயது 22). லாஸ்பேட்டையில் உள்ள தாகூர் கலைக்கல்லூரியில் பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார். 
இந்தநிலையில் குருதேவன் சரிவர படிக்காமல் நண்பர்களுடன் ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதனை கிருஷ்ணன் கண்டித்தார். இதனால் வேதனை அடைந்த குருதேவன் வீட்டின் முதல்  தளத்தில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாலி பிரிப்பு நிகழ்ச்சி
காரைக்காலை அடுத்த நிரவி நடுக்களம் பேட்டையை சேர்ந்த புஷ்பராஜ் மனைவி எஸ்தர்மேரி (54). இவரது மகன் ஸ்ரீதரனுக்கும், நெடுங்காட்டை சேர்ந்த ஜென்சியா என்பவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் ஆனது. 
இதையொட்டி அவர்களுக்கு நேற்று முன்தினம் தாலிபிரிப்பு நிகழ்ச்சி எஸ்தர்மேரி வீட்டில் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக வந்த ஜென்சியாவின் தாயாரை, அங்குள்ளவர்கள் யாரும் சரியாக கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஜென்சியா, எஸ்தர்மேரியிடம் சண்டைபோட்டு விட்டு தனது கணவருடன் நெடுங்காட்டுக்கு சென்றுவிட்டார். இதில் மனவேதனை அடைந்த எஸ்தர்மேரி, வீட்டு சமையலறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து நிரவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
எலக்ட்ரீசியன்
காரைக்கால் புதுத்துறை பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் ஜான்பிரகாஷ் (36). எலக்ட்ரீசியன். நேற்று முன்தினம் மாலை அவர், வேலை முடிந்தவுடன் மது குடித்து விட்டு வீட்டுக்கு சென்றார். இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. 
இதில் மனமுடைந்த ஜான்பிரகாஷ், வீட்டு மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.