மாநில செய்திகள்

பிளஸ்-2 மாணவர் தற்கொலை + "||" + student suicide

பிளஸ்-2 மாணவர் தற்கொலை

பிளஸ்-2 மாணவர் தற்கொலை
மதிப்பெண் குறைந்ததால் பிளஸ் மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
மதிப்பெண் குறைந்ததால் பிளஸ்-2 மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
பிளஸ்-2 மாணவர்
கிருமாம்பாக்கம் அருகே உள்ள மீனவ கிராமமான நரம்பை தண்ணீர் தொட்டி வீதியை சேர்ந்தவர் சதா (வயது 50). இவரது மனைவி கிரிஜா. இவர்களுக்கு சந்தோஷ் (17), மோகனகிருஷ்ணன் (15) ஆகிய 2 மகன்கள் இருந்தனர். இதில் சந்தோஷ் தேங்காய்த்திட்டு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். 
கொரோனா பரவல் காரணமாக பிளஸ்-2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. தேர்வு எழுதாமலேயே மாணவர்கள், அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது. முந்தைய பருவ தேர்வுகளில் எடுத்த மதிப்பெண்களை வைத்து மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. இதில் சந்தோசுக்கு மதிப்பெண்கள் குறைந்ததாக கூறப்படுகிறது.
தற்கொலை
இதனால் வேதனை அடைந்த சந்தோஷ், கடந்த 22-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதில் மயங்கி விழுந்த அவரை, குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். 
பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கிருமாம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.