மாநில செய்திகள்

கடல் அலையில் இழுத்து செல்லப்பட்ட சூடான்நாட்டு கல்லூரி மாணவரின் கதி என்ன? + "||" + What happened to the Sudanese college student

கடல் அலையில் இழுத்து செல்லப்பட்ட சூடான்நாட்டு கல்லூரி மாணவரின் கதி என்ன?

கடல் அலையில் இழுத்து செல்லப்பட்ட சூடான்நாட்டு கல்லூரி மாணவரின் கதி என்ன?
கடல் அலையில் இழுத்து செல்லப்பட்ட சூடான் நாட்டு கல்லூரி மாணவரை தேடும் பணியில் கடலோர காவல்படையினர் ஈடுபட்டுள்ளனர். நண்பர்கள் தினத்தில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
கடல் அலையில் இழுத்து செல்லப்பட்ட சூடான் நாட்டு கல்லூரி மாணவரை தேடும் பணியில் கடலோர காவல்படையினர் ஈடுபட்டுள்ளனர். நண்பர்கள் தினத்தில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
புதுச்சேரிக்கு சுற்றுலா
சூடான் நாட்டை சேர்ந்தவர் ஷரூப். தொழிலதிபர். இவரது  மகன்   சலாஹல்தீன் ( வயது27). இவர் பெங்களூரு மின்ஹாஜ் நகரில் தங்கியிருந்து, அங்குள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் பி.பி.ஏ. இறுதியாண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று நண்பர்கள் தினத்தையொட்டி, இவர் தனது நண்பர்கள் முகமது அகமது ஹாசன், ருக்யா ஆகியோருடன் பஸ்சில் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தார். புதுவையில் பல்வேறு இடங்களை சுற்றிபார்த்த அவர்கள், வாடகை மோட்டார் சைக்கிளை எடுத்து கொண்டு தவளக்குப்பம் அடுத்த புதுக்குப்பம் கடற்கரைக்கு சென்றனர்.
கதி என்ன?
பின்னர் அங்கு 3 பேரும் கடலில் இறங்கி உற்சாகமாக குளித்தனர். அப்போது, திடீரென எழுந்த ராட்சத அலையில் சலாஹல்தீன் இழுத்து செல்லப்பட்டார். பதறிபோன சக நண்பர்கள் கூச்சல் போட்டனர். சத்தம் கேட்டு அப்பகுதியில் வசிக்கும் மீனவர்கள் ஓடி வந்து அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை. கடல் அலையில் சிக்கி அவர் மூழ்கினார்.
இதுகுறித்து தவளக்குப்பம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கடலோர காவல்படை உதவியுடன் கடலில் மூழ்கி மாயமான மாணவரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவரது கதி என்னவென்று தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.