மாநில செய்திகள்

மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் + "||" + The protest was held on behalf of the All India Democratic Mather's Association, emphasizing the demands.

மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
புதுச்சேரி
தேசிய ஊரக வேலை திட்டத்தை நகர்ப்புறங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும். அதற்கான கூலியை ரூ.600 ஆக உயர்த்த வேண்டும். புதுவையில் ரேஷன் கடைகளை திறந்து இலவச அரிசி வழங்கவேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னதாக காமராஜர் சிலை அருகே இருந்து மாதர் சங்கத்தினர் ஊர்வலமாக புறப்பட்டனர். ஜனநாயக மாதர் சங்க பிரதேச செயலாளர் சத்தியா தலைமை தாங்கினார். துணை செயலாளர் மாரிமுத்து, பிரதேசக்குழு உறுப்பினர் தெய்வானை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நேரு வீதி, மிஷன் வீதி வழியாக ஆம்பூர் சாலை அருகே வந்தபோது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் அவர்கள் அங்கேயே ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணைத்தலைவர் சுதா சுந்தர்ராமன், புதுவை பிரதேச துணைத்தலைவர் இளவரசி, பாகூர் கமிட்டி உறுப்பினர் சிவகாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.