மாநில செய்திகள்

கஞ்சா கும்பல் சிறையில் அடைப்பு + "||" + Newcomers to African Central Jail have been arrested for selling cannabis to college students and youths.

கஞ்சா கும்பல் சிறையில் அடைப்பு

கஞ்சா கும்பல் சிறையில் அடைப்பு
கல்லூரி மாணவர்கள், இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக கைதான ஆப்ரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் புதுவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
புதுச்சேரி
புதுச்சேரி சிறப்பு அதிரடிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் போலீசார் குருசுக்குப்பம் பகுதியில் ஒரு வீட்டில் அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர். அங்கு 3 பெண்களும், 4 ஆண்களும் இருந்தனர்.
விசாரணையில் அவர்கள், ஆப்ரிக்க நாடுகளை சேர்ந்த உக்விஷாகா (வயது 32), முகேயோ ஆலிவர் (30), ஆக்சல், நபுகீர ஹெலன் (25), நன்டன்கோ மேரி (27), இனிமகஸ்வி மொரிட்டி (25) மற்றும் குருசுக்குப்பத்தை சேர்ந்த விவேக் (30) என்பதும், சட்டவிரோதமாக தங்கியிருந்து, கல்லூரி மாணவர்கள், இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது.
அந்த வீட்டில் இருந்து 3 கிலோ கஞ்சா, ரூ.51,120 ரொக்கப்பணம் மற்றும் 7 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்படட 7 பேர் மீது முத்தியால்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.