மாநில செய்திகள்

ஏரிக்கரையில் வெடிகுண்டுகளுடன் பதுங்கிய ரவுடி கும்பல் கைது + "||" + Rowdy gang arrested for ambushing bombs on lake

ஏரிக்கரையில் வெடிகுண்டுகளுடன் பதுங்கிய ரவுடி கும்பல் கைது

ஏரிக்கரையில் வெடிகுண்டுகளுடன் பதுங்கிய ரவுடி கும்பல் கைது
விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரை கொலை செய்ய வில்லியனூர் அருகே ஏரிக்கரையில் பதுங்கிய ரவுடி கும்பலை போலீசார் கைது செய்தனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரை கொலை செய்ய வில்லியனூர் அருகே ஏரிக்கரையில் பதுங்கிய ரவுடி கும்பலை போலீசார் கைது செய்தனர்.
6 பேர் கும்பல்
வில்லியனூர் அருகே கோர்க்காடு ஏரிக்கரையில் பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் பதுங்கி இருப்பதாக மங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்தி, உதவி சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாச்சலம், போலீஸ்காரர் வீரப்பன், குற்றப்பிரிவு போலீசார் கவியரசன், கலாநிதி, ஜெயப்பிரகாஷ் கோர்க்காடு ஏரி பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது ஏரிக்கரையில் பதுங்கி இருந்த 6 பேர் கொண்ட கும்பல் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றது. ஆனால் போலீசார் அந்த கும்பலை சுற்றிவளைத்து மடக்கினர். இதில் 5 பேர் சிக்கினர். ஒருவர் தப்பி ஓடிவிட்டனர்.
நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்
பிடிபட்டவர்களை சோதனை செய்தபோது, 2 நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் 2 பெரிய அளவிலான கத்திகள் இருந்தன. இதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் பிடிபட்ட 5 பேரையும் போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். 
விசாரணையில், அவர்கள் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்த சல்மான்கான் (வயது 21), ராஜி (18),  சிற்றரசு (20) மற்றும் வில்லியனூர் ஜி.என்.பாளையத்தை சேர்ந்த வீரபாகு (20), ரவிக்குமார் (21) என்பதும் தப்பி ஓடியவர் உத்திரவாகினி பேட்டை சேர்ந்த தனசேகர் என்பதும் தெரியவந்தது.
ரவுடி பாம் ரவி ஆதரவாளர்
கைதானவர்கள் ரவுடிகள் என்பதும், தப்பி ஓடிய தனசேகர், கடந்த சில நாட்களுக்கு முன்பு வாணரப்பேட்டையில் கொலை செய்யப்பட்ட ரவுடி பாம் ரவியின் ஆதரவாளர்கள் என்பதும் தெரியவந்தது.
தனசேகர் ஏற்பாட்டின் பேரில் வில்லியனூரை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டு ஏரிக்கரையில் பதுங்கி இருந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய தனசேகரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விடுதலை சிறுத்தைகள்   பிரமுகர் யார்? 
கொலை செய்ய திட்டமிட்ட விடுதலை சிறுத்தைகள் பிரமுகர் யார்? பாம் ரவி கொலைக்கு பழி தீர்க்க சதித்திட்டம் தீட்டப்பட்டதா? இதற்கு பின்னணியில் இருபவர்கள் யார் யார்? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் துரிதமாக செயல்பட்டு ரவுடிகளை கைது செய்த மங்கலம் போலீசாரை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன்,  மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன் ஆகியோர் பாராட்டினர்.