மாநில செய்திகள்

புதுச்சேரி பாரதி வீதி துலுக்கானத்தம்மன் கோவிலில்சாமி சிலைகள் உடைப்பு + "||" + Sami idols were smashed at the Tulukkanathamman temple on Bharathi Road in Pondicherry. Police are investigating.

புதுச்சேரி பாரதி வீதி துலுக்கானத்தம்மன் கோவிலில்சாமி சிலைகள் உடைப்பு

புதுச்சேரி பாரதி வீதி துலுக்கானத்தம்மன் கோவிலில்சாமி சிலைகள் உடைப்பு
புதுச்சேரி பாரதி வீதி துலுக்கானத்தம்மன் கோவிலில் சாமி சிலைகள் உடைக்கப்பட்டு கிடந்தன. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
புதுச்சேரி
 புதுச்சேரி பாரதி வீதி துலுக்கானத்தம்மன் கோவிலில் சாமி சிலைகள் உடைக்கப்பட்டு கிடந்தன. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

சிலைகள் உடைப்பு

புதுவை   பாரதி வீதியில் உள்ள துலுக்கானத்தமன் கோவில் அந்த பகுதியில் பிரசித்தி பெற்றதாகும். நேற்று மதியம் உச்சிகால பூஜையை முடித்து கோவில் நடையை சாத்திவிட்டு பூசாரி அய்யனார் வீட்டிற்கு சென்றார். பின்னர்  மாலையில் மீண்டும் அங்கு வந்த அவர் கோவில் கதவு திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே பதறியடித்துக் கொண்டு கோவிலுக்குள் சென்று பார்த்தபோது துர்க்கையம்மன், விநாயகர், முருகர் ஆகிய சாமி சிலைகள் உடைக்கப்பட்டு சேதப்படுத்தி இருந்தது கண்டு திடுக்கிட்டார்.

கேமரா ஆய்வு

இதுகுறித்து அய்யனார் தெரிவித்த தகவலின் பேரில் கோவில் அறங்காவல் குழுவினர் முத்தியால்பேட்டை போலீசுக்கு தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். 
அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் காட்சிகளை பார்வையிட்டு கோவிலுக்குள் புகுந்து சாமி சிலைகளை சேதப்படுத்திய நபர்கள் யார்? எனவும் விசாரித்து வருகிறார்கள். பட்டப்பகலில் கோவிலுக்குள் இருந்த சாமி சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.