மாநில செய்திகள்

புதிய தொழிற்சாலைகள் தொடங்கமத்திய அரசு சலுகைகள் வழங்க வேண்டும் ரங்கசாமி வலியுறுத்தல் + "||" + At a meeting of finance ministers, First Minister Rangasamy urged the central government to provide incentives to start new factories in puducherry and Karaikal.

புதிய தொழிற்சாலைகள் தொடங்கமத்திய அரசு சலுகைகள் வழங்க வேண்டும் ரங்கசாமி வலியுறுத்தல்

புதிய தொழிற்சாலைகள் தொடங்கமத்திய அரசு சலுகைகள் வழங்க வேண்டும் ரங்கசாமி வலியுறுத்தல்
புதுவை, காரைக்காலில் புதிய தொழிற்சாலைகள் தொடங்க மத்திய அரசு சலுகைகள் வழங்க வேண்டும் என்று நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி வலியுறுத்தினார்.
புதுச்சேரி
புதுவை, காரைக்காலில் புதிய தொழிற்சாலைகள் தொடங்க மத்திய அரசு சலுகைகள் வழங்க வேண்டும் என்று நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி வலியுறுத்தினார்.

நிதி அமைச்சர்கள் கூட்டம்

அனைத்து மாநில நிதி அமைச்சர்கள் கூட்டம் நேற்று மாலை காணொலிக் காட்சி மூலமாக நடந்தது. கூட்டத்திற்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் புதுச்சேரியில் நிதி பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி சட்டசபை வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து கலந்து கொண்டார். 
அப்போது அவர் கூறியதாவது:-

மின்துறை கட்டமைப்பு

சுற்றுலாவை மேம்படுத்த புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்த மத்திய அரசு நிதி உதவி அளித்திட வேண்டும். ஹெலிகாப்டர் சேவை, நீர் விளையாட்டு, மாநாட்டு மையம், திரைப்பட நகரம், பொழுதுபோக்கு பூங்கா அமைக்கவும் நிதி உதவி தர வேண்டும். தடையில்லா மின்சாரம் வழங்க மின்துறையின் அடிப்படை கட்டமைப்பு வசதியை மேம்படுத்த வேண்டியது அவசியம். இதற்காக மத்திய அரசின் திட்டமான ஆர்.டி.எஸ்.எஸ். மூலமாக நிதி அளிக்க வேண்டும்.
புதுச்சேரியில் தொழிற்சாலையை மேம்படுத்த, புதிய தொழிற்சாலைகள் அமைப்பது அவசியம் ஆகும். புதிய தொழிற்சாலைகள் அமைக்க போதுமான இடங்கள் புதுவை, காரைக்காலில் தயார் நிலையில் உள்ளது. தொழிற்சாலை தொடங்க மத்திய அரசு சலுகைகள் வழங்க வேண்டும். 
தகவல் தொடர்பு மற்றும் அது சார்ந்த தொழில்கள் தொடங்கவும், ‘ஸ்டார்ட் அப் கம்பெனிஸ்’ அமைக்கவும் நிதி உதவி அளித்திட வேண்டும். சூரிய மின் சக்தி திட்டங்களை ஆர்.இ.எஸ்.சி.ஓ. பூட் மாடல் மூலமாக செயல்படுத்த ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.

மத்திய நிதி உதவி

மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் புதுவையில் அமைப்பதற்கு ஏற்ற சூழல் உள்ளது. இந்த திட்டத்திற்கு மத்திய அரசின் உதவி தேவைப்படுகிறது. அனைவருக்கும் சுகாதார திட்டத்திற்கு 500 படுக்கைகள் கொண்ட தொற்று நோய் சம்பந்தமான மருத்துவமனை அமைக்கவும், பிரதம மந்திரியின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை முழுமையாக செயல்படுத்திடவும் மத்திய அரசு 100 சதவீதம் நிதி உதவ வேண்டும். 
சாகர்மாலா திட்டத்தின் கீழ் புதுவை துறைமுகத்தை மேம்படுத்தவும், படகு போக்குவரத்து தொடங்கவும், துறைமுகத்தை தூர்வாரவும், சாலைகளை இணைக்கவும் நிதி உதவி அளிக்க வேண்டுகிறேன்.

அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானியத்தை எனது அரசு உயர்த்தியுள்ளது. இதற்காக ரூ.126.74 கோடி தேவைப்படுகிறது. மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்பவும், அதிகரிக்கும் சுற்றுலா பயணிகளின் வருகையை கருத்தில் கொண்டும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், நகர மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நிதி உதவி தேவைப்படுகிறது. இவற்றை மத்திய அரசு வழங்க வேண்டும். 

10 சதவீதம் உயர்த்தி வழங்க 

இதே போல் மத்திய அரசால் வழங்கப்படும் மத்திய நிதி உதவியை ஆண்டு தோறும் 10 சதவீதம் உயர்த்தி வழங்க கேட்டுக்கொள்கிறேன். எங்களின் கோரிக்கைளை மத்திய அரசு கனிவுடன் பரிசீலித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். 
அப்போது அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.