மாவட்ட செய்திகள்

மழை வெள்ள பாதிப்பு: தமிழிசை சவுந்தரராஜனுடன் புதுச்சேரி முதல் மந்திரி ஆலோசனை + "||" + Puducherry Chief Minister consults with Tamilisai Soundararajan

மழை வெள்ள பாதிப்பு: தமிழிசை சவுந்தரராஜனுடன் புதுச்சேரி முதல் மந்திரி ஆலோசனை

மழை வெள்ள பாதிப்பு: தமிழிசை சவுந்தரராஜனுடன் புதுச்சேரி முதல் மந்திரி ஆலோசனை
புதுச்சேரி முதல் மந்திரி ரங்கசாமி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
புதுச்சேரி,

கனமழை காரணமாக புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் விளைநிலங்களில் வெள்ள நீர் புகுந்ததால், விளைச்சலுக்கு தயாராகி இருந்த பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. 

இந்த நிலையில் மழை வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு வரும் திங்கள்கிழமை புதுச்சேரி வருகிறது. இதையொட்டி புதுச்சேரி முதல் மந்திரி ரங்கசாமி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். அப்போது மழை வெள்ள பாதிப்புகளுக்கான மத்திய அரசின் நிதியை கோருவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.