மாநில செய்திகள்

மழை வெள்ளத்தால் புதுச்சேரி பாதிப்பு தொலைநோக்கு பார்வையோடு தீர்வு காண வேண்டும்மத்திய குழுவிடம், கவர்னர் தமிழிசை வலியுறுத்தல் + "||" + Governor Tamizhai Saundarajan urged the Central Committee to find a solution with a vision as Pondicherry continues to be affected by the monsoon floods.

மழை வெள்ளத்தால் புதுச்சேரி பாதிப்பு தொலைநோக்கு பார்வையோடு தீர்வு காண வேண்டும்மத்திய குழுவிடம், கவர்னர் தமிழிசை வலியுறுத்தல்

மழை வெள்ளத்தால் புதுச்சேரி பாதிப்பு தொலைநோக்கு பார்வையோடு தீர்வு காண வேண்டும்மத்திய குழுவிடம்,  கவர்னர் தமிழிசை வலியுறுத்தல்
மழை வெள்ளத்தால் புதுச்சேரி தொடர்ந்து பாதிக்கப்படுவதால் தொலைநோக்கு பார்வையோடு தீர்வு காண வேண்டும் என மத்திய குழுவிடம், கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தினார்.
புதுச்சேரி
மழை வெள்ளத்தால் புதுச்சேரி தொடர்ந்து பாதிக்கப்படுவதால் தொலைநோக்கு பார்வையோடு தீர்வு காண வேண்டும் என மத்திய குழுவிடம்,   கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தினார்.

புதுச்சேரியில் வெள்ள சேதங்களை பார்வையிட வந்த மத்திய குழுவினர் கவர்னர் மாளிகையில், கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து பேசினர். அப்போது அவர் மத்திய குழுவினரிடம் கூறியதாவது:-

விவசாயிகள் பாதிப்பு

புதுச்சேரியில் பெய்த கனமழையால் விவசாயிகளும் மீனவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகள், படகுகள், பயிர்கள் மழை வெள்ளத்தில் மூழ்கியதால் அவர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால் கொசுவால் ஏற்படும் மலேரியா, தொற்று நோய்கள் போன்றவை ஏற்படக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஒரு மருத்துவராக எனக்கு இது கவலை அளிக்கிறது.

தொலைநோக்கு பார்வையோடு...

புதுச்சேரியை சேர்ந்த அதிகாரிகள் நள்ளிரவிலும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு மக்களை நிவாரண முகாம்களில் தங்க வைத்து உணவு உள்ளிட்ட உதவிகளை வழங்கி உள்ளனர். வீடுகளை மழை, வெள்ளம் சூழ்ந்திருப்பதால் குழந்தைகள் உட்பட பலர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
புதுச்சேரி, கடற்கரையை ஒட்டிய பகுதி என்பதால் ஒவ்வொரு ஆண்டும் புயலாலும் கடுமையான மழை வெள்ளத்தாலும் பாதிக்கப்படுகிறது. இதற்கு தீர்வு காண வேண்டியது அவசியமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.