மாநில செய்திகள்

கனமழை எச்சரிக்கைபொதுமக்களுக்கு அவசரகால சேவை மையம்கலெக்டர் பூர்வா கார்க் தகவல் + "||" + Collector Purva Cork said the public can contact the emergency service center in case of a heavy rain warning for Puduvai.

கனமழை எச்சரிக்கைபொதுமக்களுக்கு அவசரகால சேவை மையம்கலெக்டர் பூர்வா கார்க் தகவல்

கனமழை எச்சரிக்கைபொதுமக்களுக்கு அவசரகால சேவை மையம்கலெக்டர் பூர்வா கார்க் தகவல்
புதுவைக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அவசர கால சேவை மையத்தை பொதுமக்கள் தொடர்புகொள்ளலாம் என்று கலெக்டர் பூர்வா கார்க் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி
புதுவைக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அவசர கால சேவை மையத்தை பொதுமக்கள் தொடர்புகொள்ளலாம் என்று கலெக்டர் பூர்வா கார்க் தெரிவித்துள்ளார்.
புதுவை கலெக்டர் பூர்வா கார்க் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கனமழை எச்சரிக்கை

புதுவையில்   வடகிழக்கு பருவமழை   காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
ஆற்றின் கரையோரங்களில் வசிப்போர், தாழ்வான பகுதிகளில் வசிப்போர் அங்கிருந்து அகற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.   புதுவை மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசுத்துறைகள் முறையாக கையாண்டு நிலைமை சகஜ நிலைக்கு திரும்ப ஏற்பாடு செய்துள்ளது. இப்போது வானிலை ஆய்வு மையம், வங்கக்கடலில் உருவாகும் மற்றொரு காற்றழுத்த தாழ்வு நிலை வடமேற்கு திசையில் நகர உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக புதுவை, காரைக்காலில்       வருகிற 28-ந்தேதி வரை   கனமழை மற்றும் அதிகனமழை பெய்யும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனை   எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

அவசர கால மையம்

பொதுமக்களுக்கு ஏதேனும் அவசர தேவை, உதவிகள் தேவைப்பட்டால் அவசர கால மையத்தை 1070, 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களை 24 மணிநேரமும்    தொடர்புகொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.