மாநில செய்திகள்

புதுவையில் இன்று 893 பேருக்கு தொற்றுஅசுர வேகத்தில் பரவும் கொரோனா பாதிப்பு + "||" + The corona asura is accelerating in the newcomer. In a single day, 893 people were infected. One person was killed in puducherry.

புதுவையில் இன்று 893 பேருக்கு தொற்றுஅசுர வேகத்தில் பரவும் கொரோனா பாதிப்பு

புதுவையில்  இன்று  893 பேருக்கு தொற்றுஅசுர வேகத்தில் பரவும் கொரோனா பாதிப்பு
புதுவையில் கொரோனா அசுர வேகமெடுத்து வருகிறது. ஒரே நாளில் 893 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் பலியானார்.
புதுச்சேரி
புதுவையில் கொரோனா அசுர   வேகமெடுத்து வருகிறது. ஒரே நாளில் 893 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் பலியானார்.

அதிகரிப்பு

புதுவையில்   ஜனவரி தொடக்கம்  முதல் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. நாளொன்றுக்கு 500-க்கும் மேற்பட்டோர்   பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் இன்று காலை 10 மணியுடன் நிறவைடைந்த 24 மணிநேரத்தில் 4 ஆயிரத்து 387 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 893 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. இது, அடுத்த சில நாட்களில் ஆயிரத்தை நெருங்கும் என்று கூறப்படுகிறது. 

3 ஆயிரம் பேருக்கு சிகிச்சை

தற்போது ஆஸ்பத்திரிகளில் 137 பேர், வீடுகளில் 3 ஆயிரத்து 66 பேர் என 3 ஆயிரத்து 203 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 44 பேர் குணமடைந்தனர். இந்தநிலையில் புதுச்சேரியில் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,883 ஆக உயர்ந்துள்ளது.
புதுவையில் தொற்று பாதிப்பு 20.38 சதவீதமாகவும், குணமடைவது 96.17 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முன்தினம் முதல் தவணை தடுப்பூசியை 5 ஆயிரத்து 555 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 1,968 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 412 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 14 லட்சத்து 85 ஆயிரத்து 255 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.