மாநில செய்திகள்

மின் கட்டண உயர்வை ரத்து செய்யவேண்டும் + "||" + The electricity fee hike should be canceled

மின் கட்டண உயர்வை ரத்து செய்யவேண்டும்

மின் கட்டண உயர்வை ரத்து செய்யவேண்டும்
புதுச்சேரியில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை அரசு ரத்து செய்ய வேண்டும் என முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை அரசு ரத்து செய்ய வேண்டும் என முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
மிரட்டி இழுத்தனர்
மத்தியில் ஆளும் பா.ஜ.க.வும், பிரதமர் மோடியும், உள்துறை மந்திரி அமித்ஷாவும் புதுச்சேரி மாநிலத்தில் விதைத்த விதையின் அறுவடையை இப்போது உத்தரபிரதேசத்தில் பார்கிறார்கள். புதுவை மாநிலத்தில் கடந்த 2021 பிப்ரவரி மாதத்தில்        காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கியும், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களை வருமான வரித்துறை, அமலாக்கப்பிரிவு, மத்திய உளவுத்துறை மூலமாக மிரட்டியும் தங்கள் பக்கம் இழுத்தனர்.
புதுவையில் காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிக்க, பா.ஜ.க. கடைப்பிடித்த யுக்தி இப்போது உத்தரபிரதேசம், கோவா ஆகிய மாநிலங்களில் திரும்பி அடிக்கிறது. கட்சி கொள்கை இல்லாமல் பணம், அதிகார பலத்தை நம்பி தேர்தலை சந்திக்கிறார்களோ அவர்களுக்கு அழிவு காலம் வெகுதூரம் இல்லை.
மின் கட்டண உயர்வு
புதுவையில் கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்ற அரசு விழிப்போடு இருக்க வேண்டும். மக்களை காப்பாற்ற வேண்டிய கடமை ரங்கசாமிக்கும், சுகாதார துறைக்கும் உள்ளது. புதுச்சேரியில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை அரசு ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.