புதுச்சேரி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி காரைக்காலில் மனித சங்கிலி போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, காரைக்காலில் தி.மு.க. தலைமையில் அனைத்து கட்சி சார்பில், நேற்று மாலை மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.


கொலை வழக்கில் தொடர்புடையவரை தேடி வந்தபோது கலவரம்: தனியார் தொழிற்சாலை சூறை; லாரிக்கு தீவைப்பு, போலீசார் தடியடி

தொழில் அதிபர் கொலை வழக்கில் தொடர்புடையவரை தேடி திருபுவனையில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு வந்த அவருடைய ஆதரவாளர்களால் தொழிற்சாலை சூறையாடப்பட்டது. மேலும் அங்கிருந்த வாகனங்களை சேதப்படுத்தி லாரிக்கு தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திட்டங்களை கண்காணிப்பது தடை ஆகாது: நாராயணசாமி குற்றச்சாட்டுக்கு கிரண்பெடி பதிலடி

அரசின் திட்டங்களை கண்காணிப்பது தடை ஆகாது என்று நாராயணசாமியின் குற்றச்சாட்டுக்கு கவர்னர் கிரண்பெடி விளக்கம் அளித்துள்ளார்.

தொடரும் குற்ற சம்பவங்கள்: போலீஸ் அதிகாரிகளுடன் நாராயணசாமி ஆலோசனை

புதுவையில் அதிகரித்து வரும் குற்ற செயல்களை தொடர்ந்து போலீஸ் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார்.

ரூ.59 கோடி செலவில் நெய்வேலியில் இருந்து காரைக்காலுக்கு நேரடி மின்சாரம், மின் கோபுரம் அமைக்கும் பணிகளை அமைச்சர் ஆய்வு

ரூ.59 கோடி செலவில் நெய்வேலியில் இருந்து காரைக்காலுக்கு நேரடியாக மின்சாரம் பெறும் வகையில் நடைபெற்றுவரும் மின் கோபுரங்கள் அமைக்கும் பணிகளை அமைச்சர் கமலக்கண்ணன் ஆய்வு செய்தார்.

பங்குச்சந்தையில் முதலீடு செய்து அதிக பணம் தருவதாக கூறி ரூ.2 கோடி மோசடி செய்தவர் கைது

புதுச்சேரியில் பலரிடம் பங்குச்சந்தையில் முதலீடு செய்து அதிக பணம் தருவதாக கூறி ரூ.2 கோடி மோசடி செய்த சென்னையை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.

இலவச அரிசி வழங்க ஒப்புதல் தராமல் அரசுக்கு கவர்னர் கிரண்பெடி களங்கம் ஏற்படுத்த முயற்சி - முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு

இலவச அரிசி வழங்க ஒப்புதல் தராமல் அரசுக்கு கவர்னர் கிரண்பெடி களங்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.

புதுவை அருகே ஜாமீனில் வந்த மறுநாளே ரவுடி படுகொலை

புதுவையில் ஜாமீனில் வெளியே வந்த பிரபல ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மோட்டார் சைக்கிள் மீது மோதி வெட்டித் தள்ளிய கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஆராய்ச்சியில் மருத்துவ மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும் - கவர்னர் கிரண்பெடி அறிவுரை

மருத்துவ மாணவர்கள் மருத்துவ ஆராய்ச்சியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி அறிவுரை கூறினார்.

ரங்கசாமியின் கபட நாடகம் மக்களிடம் எடுபடாது - முதல்-அமைச்சர் நாராயணசாமி பாய்ச்சல்

எதையும் உரிய காலத்தில் செய்யாத ரங்கசாமியின் கபட நாடகம் மக்களிடம் எடுபடாது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

மேலும் புதுச்சேரி

5

News

4/27/2018 1:54:10 PM

http://www.dailythanthi.com/News/Puducherry/3