முதலீடு கிடையாது.. ஆனால் வருமானம் உண்டு..


முதலீடு கிடையாது.. ஆனால் வருமானம் உண்டு..
x
தினத்தந்தி 30 Sep 2018 12:02 PM GMT (Updated: 30 Sep 2018 12:02 PM GMT)

சொந்தமாக எந்த நிறுவனமும் இல்லை, வேலைக்கு ஆட்களும் இல்லை, முதலீடும் இல்லை.. ஆனால் வருமானம் மாதம் தோறும் வந்து கொண்டிருக்கிறது. அது எப்படி?

- இப்படி ஒரு கேள்வியை கேட்கும் போது இது ஒரு விடுகதை போன்று தோன்றும். ஆனால் ரஞ்ஜினி யின் வாழ்க்கையில் இது கதை அல்ல, நிஜம்.

இப்போது ஏராளமானவர்கள், சிறிய அளவில் பொருட்களை தயாரிக்கிறார் கள். ஆனால் அவர்களது பொருட் களை வாங்க சரியான வாடிக்கை யாளர்கள் கிடைப்பதில்லை. அவர்கள் தயாரிக்கும் பொருட்களும் வெளி உலகத்திற்கு தெரியாமல் போய்விடு கிறது. அப்படிப்பட்டவர்களின் பொருட்களை ஆன்லைன் மூலம் உலகம் முழுக்க தெரியவைப்பதும், மார்க்கெட்டிங் செய்துகொடுப்பதும் ரஞ்ஜினியின் வேலை. இவர் கத்தாரில் வசிக்கிறார். கேரளாவை தனது பணிக்களமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். இந்த வேலை மூலம் தன்னால் மாதந்தோறும் 40 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்க முடிவதாக கூறுகிறார்.

“சிறிய அளவில் தொழில் தொடங்கியிருப்பவர்களை ஆன் லைன் உலகிற்குள் அடியெடுத்து வைக்கச் செய்து அவர்களுக்கு வழிகாட்டுவதுதான் என் வேலை. சமூக வலைத்தளங்கள் மூலம் அவர் களுக்கான பிராண்டை உருவாக்க என்னால் முடிந்தவைகளை செய்கி றேன். சிறகு முளைத்து வருகிறவர்க ளுக்கு பறக்க சொல்லிக்கொடுப்பது போன்றது என் வேலை. வீட்டில் இருந்தபடியே செய்கின்ற இந்த வேலை எனக்கு நல்ல வருமானத்தை தேடித் தந்துகொண்டிருக்கிறது” என்கிறார்.

ரஞ்ஜினி இந்த வேலையை எப்படி தேர்ந்தெடுத்தார்?

“குடும்பத் தலைவியான எனக்கு, வீட்டில் இருந்தபடியே நான் செய்யக்கூடிய வேலை எது என்று தேடத் தொடங்கினேன். அப்போது தான் ஆன்லைன் மார்க்கெட்டிங் பற்றி எனக்கு தெரியவந்தது. ஒரு கம்ப் யூட்டர், ஸ்பீடான நெட் கனெக்‌ஷன் இரண்டும் இருந்தால் வீட்டில் இருந்த படியே இதை செய்யலாம் என்பதால் இந்த ஆன்லைன் மார்க்கெட்டை நான் தேர்ந்தெடுத்தேன். இதற்காக யாரையும் சார்ந்திருக்கவேண்டியதி ல்லை. என்னால் மட்டுமே அனைத்து வேலைகளையும் பார்த்துக்கொள்ள முடியும் என்பதால், இது பற்றிய பயிற்சி வகுப்புகளுக்கு சென்று, இது பற்றிய கூடுதல் விஷயங்களை கற்றுக் கொண்டேன்.

வெப்சைட், சோஷியல் மீடியா, கூகுள் அட்வர்டைஸ்மென்ட் போன்ற வைகளில் எனது வாடிக்கையாளர் களின் தயாரிப்புகளை பற்றி பகிர்ந்து கொள்கிறேன். எனது உதவியை நாடு கிறவர்களுக்கு அவைகள் மூலம் வழிகாட்டுகிறேன். அவர்களது தயா ரிப்புகள் பற்றி விளக்கமாக எழுதவும் செய்கிறேன். இதற்காக பல ப்ளாக் குகளில் எழுதி, அவைகளை சோஷி யல் மீடியாக்களில் ஷேர் செய்கிறேன்.

சிலர் நிபுணத்துவம் வாய்ந்தவர் களால்தான் இதுபோன்ற பணிகளை செய்ய முடியும் என்று நினைக் கிறார்கள். என்னை போன்ற சாதா ரண குடும்பத்தலைவிகளாலும் இதை செய்து பணம் சம்பாதிக்க முடியும். இந்த வெற்றிக்கு நான் எனது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக் கும்தான் நன்றிக்கடன்பட்டிருக் கிறேன். ஆனால் எந்த வேலையாக இருந்தாலும் எளிதாக பணம் சம்பாதித்துவிட முடியாது. தொடர் முயற்சிகளும், கடும் உழைப்பும் அதற்கு அவசியம். இந்த தொழிலுக்கும் அது தேவைப்பட்டது” என்கிறார், ரஞ்ஜினி. 

Next Story