ஜே சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சாம்சங் அறிமுகம்


ஜே சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சாம்சங் அறிமுகம்
x
தினத்தந்தி 3 Oct 2018 3:16 PM IST (Updated: 3 Oct 2018 3:16 PM IST)
t-max-icont-min-icon

மின்னணு பொருட்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள சாம்சங் நிறுவனம் தனது பிரபலமான ஜே சீரிஸில் இரண்டு ஸ்மார்ட்போன்களை கடந்த வாரம் அறிமுகப்படுத்தியுள்ளது.

‘கேலக்ஸி ஜே 4’ மற்றும் ‘கேலக்ஸி ஜே 6’ என்ற பெயரில் இவை வெளிவந்துள்ளன.

ஜே 4 விலை ரூ. 10,990. அதேபோல ஜே 6 விலை 15,990 ஆகும். அமேசான், பிளிப்கார்ட், சாம்சங் விற்பனையகத்தில் செப்டம்பர் 25-ம் தேதி முதல் இது கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன்களின் பின்புறம் பாலிகார்பனேட்டால் ஆனது. அத்துடன் இது கண்ணாடி போன்ற வழவழப்பு தன்மையோடு மிளிர்கிறது.

சாம்சங் மாடலில் ‘ஜே சீரிஸ்’ மாடல் மிகவும் பிரபலமானது. இந்தியாவில் விற்பனையாகும் மூன்று ஸ்மார்ட்போன்களில் ஒரு ஸ்மார்ட்போன் ஜே சீரிஸ் வகையாகும். இந்த மாடலில் கைரேகை பதிவு பக்கவாட்டில் உள்ளது. ஜே 6 மாடல் 4 ஜி.பி. ரேம் மற்றும் 64 ஜி.பி. நினைவகம் கொண்டது. ஜே 4 மாடல் 2 ஜி.பி. ரேம் மற்றும் 32 ஜி.பி. நினைவகம் கொண்டது.

இரண்டு ஸ்மார்ட்போன்களுமே 3,300 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் வெளிவந்துள்ளன. ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தில் செயல்படுபவை. இதில் டால்பி அட்மோஸ் இருப்பதால் மிகச் சிறப்பான இசை 360 டிகிரி சுழற்சியில் எங்கும் பரவும்.

ஜே 6 மாடலில் 13 மெகா பிக்ஸெல் மற்றும் 5 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. முன்பகுதியில் 8 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. ஜே 4 மாடலில் 13 மெகா பிக்ஸெல் கேமரா மற்றும் முன்பகுதியில் 5 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளன.

இந்த ஸ்மார்ட்போன்கள் ஹெச் டி பிளஸ் இன்பினிடி டிசைனில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் தொடு திரை அளவு வழக்கத்தை விட 15 சதவீதம் கூடுதலாக உள்ளது. இரண்டு மாடலிலுமே குவால்காம் ஸ்நாப்டிராகன் 425 பிராசஸர் உள்ளது. இந்தியர்களுக்கு என ‘எமோடிபை’ எனும் சிறப்பம்சம் புகுத்தப்பட்டுள்ளது. இது இந்தியாவின் 22 மொழிகளில் கிடைக்கும். இதனால் நண்பர்கள் தங்களுக்குப் பிடித்தமான பொம்மைகள், அவதார் உள்ளிட்டவற்றின் மூலம் உரையாடலாம். மேலும் உரையாடலை பதிவு செய்வதற்கான வாய்ப்பையும் அளிக்கிறது. இதற்கென உள்ள செயலியை (ஆப்) பதிவிறக்கம் செய்வதன் மூலம் உரையாடல் பதிவுகளை மெமரி கார்டுக்கு மாற்றிக் கொள்ளும் வசதியும் அளிக்கிறது.

இவ்விரண்டு போன்களிலுமே 4 ஜி வோல்ட், வை-பை 802.11 ஹெச்.ஜி.என், புளூடூத் 4.2, என்.எப்.சி., ஜி.பி.எஸ்./குளோநாஸ், யு.எஸ்.பி. போர்ட், 3.5 மி.மீ. ஹெட்போன் ஜாக் ஆகியன உள்ளன.
1 More update

Next Story