வனத்துறையில் 1178 பணியிடங்கள்


வனத்துறையில் 1178 பணியிடங்கள்
x
தினத்தந்தி 9 Oct 2018 5:08 AM GMT (Updated: 9 Oct 2018 5:08 AM GMT)

தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் டி.என்.எப்.யு.எஸ்.ஆர்.சி. எனப்படுகிறது. இந்த அமைப்பு வனத்துறையில் ஏற்படும் பணியிடங்களை நிரப்பும் அமைப்பாக செயல்படுகிறது.

தற்போது தமிழ்நாடு வனத்துறையில் வனவர், வனக்காப்பாளர் போன்ற பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. வனவர் பணிக்கு 300 பேரும், வனக் காப்பாளர் பணிக்கு 726 பேரும், ஓட்டுனர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பணிக்கு 152 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். மொத்தம் 1178 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

வேளாண்மை, அனிமல் ஹஸ்பண்டரி, தாவரவியல், வேதியியல், கணினி அறிவியல், பொறியியல், சூழ்நிலை அறிவியல், வனவியல், புவியியல், தோட்டக்கலை, கடல் உயிரியல், கணிதவியல், இயற்பியல், புள்ளியியல், கால்நடை அறிவியல், வனவாழ்வு உயிரியல், உயிரியல் போன்ற பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு 5 ஆண்டுகள் வரை தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

இணையதள தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். விருப்பமுள்ளவர்கள் இதற்கான இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பப்பதிவு 15-10-2018 அன்று தொடங்குகிறது, 5-11-2018-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விவரங்களை www.forests.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

Next Story