தமிழக வேலைவாய்ப்புகள்


தமிழக வேலைவாய்ப்புகள்
x
தினத்தந்தி 9 Oct 2018 5:17 AM GMT (Updated: 9 Oct 2018 5:17 AM GMT)

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் ஏராளமான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது.

குழந்தை மேம்பாட்டு கழகம்

தமிழக அரசின், அங்கன்வாடி மையங்களுடன் இணைந்த அமைப்பு ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு கழகம் (ஐ.சி.டி.எஸ்.). தற்போது இந்த அமைப்பில் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர்கள், திட்ட உதவியாளர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு மொத்தம் 178 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் 83 பின்னடைவுப் பணியிடங்கள் ஆகும். கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருச்சி, திருநெல்வேலி, திருவள்ளூர், விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் பணியிடங்கள் உள்ளன.

இந்த பணிகளுக்கு டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். நேர்காணல் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் 24-10-2018-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். இது பற்றிய விவரங்களை www.icds.tn.nic.inஎன்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.

அரசு வழக்கறிஞர்

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அரசு உதவி வழக்கறிஞர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மொத்தம் 46 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பி.எல். சட்டப்படிப்பு படித்து, பார் கவுன்சிலில் பதிவு செய்து வைத்திருப்பவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 34 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். தமிழக அரசு விதிகளின்படி இட ஒதுக்கீடு பெறும் பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்ப பதிவு கட்டணமாக ரூ.150, முதல்நிலை தேர்வுக்கட்டணமாக ரூ.100, முதன்மைத் தேர்வு கட்டணமாக ரூ.200 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்டவர்களுக்கு கட்டணத்தில் விதிவிலக்கு உண்டு.

விருப்பமுள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 31-10-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். முதல்நிலைத் தேர்வு 5-1-2019 அன்றும், முதன்மைத் தேர்வு அடுத்த ஆண்டு மே மாதமும் நடைபெறுகிறது. இது பற்றிய விவரங்களை www.tnpsc.gov.inஎன்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

சுகாதார பணியாளர் வேலை

தமிழக சட்டசபை செயலகத்தில் சுகாதார பணியாளர் வேலைக்கு 14 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான சுய விவரப்பட்டியலை, புகைப்படம் இணைத்து தலைமைச் செயலக முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பம் 25-10-2018-ந் தேதிக்குள் சென்றடைய வேண்டும். இது பற்றிய விவரம் http://www.assembly.tn.gov.in/என்ற இணையதள பக்கத்தில் வெளியாகி உள்ளது.

டி.என்.பி.எஸ்.சி.

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாைணயம் கட்டிடக்கலை உதவியாளர், திட்ட உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு 13 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சிவில் மற்றும் ஆர்கிடெக்சர் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பொதுப்பிரிவு விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். மற்ற பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை. விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 10-10-2018-ந் தேதியாகும். இது பற்றிய கூடுதல் விவரங்களை http://www.tnpsc.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

1474 ஒப்பந்த ஆசிரியர்கள்

தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளது. மொத்தம் 1474 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இவர்கள் 6 மாத ஒப்பந்த அடிப்படையில் ரூ.7500 ஊதியத்திற்கு பணி நியமனம் செய்யப்படுகிறார்கள். அனைத்து மாவட்டங்களிலும் காலியிடங்கள் உள்ளன. தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, வணிகவியல், பொருளியல் ஆகிய 11 பாடப்பிரிவுகளில் முதுநிலை ஆசிரியர் பணிகள் உள்ளன. அந்த மாவட்டத்தில் உள்ள காலியிட விவரங்களையும், பள்ளியின் விவரங்களையும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் அறிந்து கொள்ளலாம். அங்கேயே விண்ணப்ப படிவமும் சமர்ப்பிக்கலாம். கடந்த வாரம் இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. கூடுதல் விவரங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் பெறலாம்.

Next Story