சிறப்புக் கட்டுரைகள்

வானவில் : முதியவர்களுக்கு ஏற்ற மொபைல் போன் + "||" + Vanavil : Mobile phone for older persons

வானவில் : முதியவர்களுக்கு ஏற்ற மொபைல் போன்

வானவில் : முதியவர்களுக்கு ஏற்ற மொபைல் போன்
இந்தியாவைச் சேர்ந்த ராயல் நிறுவனம் முதியவர்களுக்கு ஏற்ற வகையிலான மொபைல் போனை உருவாக்கியுள்ளது.
பொதுவாகவே இப்போதைய தலைமுறையினரைப் போல ஸ்மார்ட்போன்களைக் கையாளும் வகையில் முந்தைய தலைமுறையைச் சேர்ந்த முதியவர்கள் கிடையாது. அவர்களது உலகமே வேறு.

தொழில்நுட்ப வளர்ச்சி அடையாத காலத்தில் வாழ்ந்த அவர்களுக்கு கிரஹாம் பெல் கண்டுபிடித்த தொலைபேசியே பெரிய விஷயம். ஆனால் இப்போது வீட்டிலுள்ள அனைவருக்கும் செல்போன் இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. வீட்டிலுள்ள முதியவர்களும் பயன்படுத்தும் வகையில் செல்போன் இருக்கவேண்டும் என்று உணர்வோர் இந்த ராயல் போனை அவர்களுக்கு வாங்கி அளிக்கலாம்.

பிளிப் பிளாப் (மடக்கும் வகையில்) வடிவில் வந்துள்ளது இந்த போன். முதியவர்களுக்கு அவசியமான 20-க்கும் மேற்பட்ட சிறப்பு அம்சங்கள் இதில் உள்ளன. 2.3 அங்குல திரை கொண்டது. இதில் விவரங்கள் தெளிவாக தெரியும்.

இதில் உள்ள பொத்தான்கள் முதியவர்கள் கையாளும் வகையில் பெரிதாக உள்ளன. இதில் உள்ள சிறப்பம்சமே டாக்கிங் கீ பேட்தான். இதனால் எந்த பொத்தானை அழுத்துகிறோம் என்பதை முதியவர்கள் எளிதில் கேட்க முடியும். மேலும் பொத்தானுக்கு கீழ் பகுதியில் ஒளிரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் எழுத்துகளை அவர்களால் எளிதாக படிக்க முடியும். எப்.எம். ரேடியோ வசதியும் உள்ளன.

பொதுவாக முதியவர்கள் போனை பயன்படுத்தும்போது மறுமுனையில் இருப்பவர்களின் பேச்சு சரிவர கேட்காது. முதுமை காரணமாக இவர்கள் பேசுவதும் மறுமுனையிலிருப்பவருக்குக் கேட்காது.

இந்தக் குறைகளைப் போக்கும் வகையில் இந்த போனின் சவுண்ட் சிஸ்டம் மிகவும் தரமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் பேசுவது தெளிவாக இருக்கும். மறுமுனை பேச்சும் சத்தமாக காதில் விழும்.

தொடர்புடைய செய்திகள்

1. வானவில் : இனி வலிக்கும் ஊசி தேவையில்லை
சிறியவர்கள் மட்டுமின்றி பெரியவர்களுக்கும் ஊசி என்றால் மனதிற்குள் ஒரு பயமிருக்கும். எம்.ஐ.டி. விஞ்ஞானிகளும், ஜப்பானை சேர்ந்த ஒரு மருத்துவக் குழுவும் இணைந்து ப்ரைம் என்னும் ஒரு கருவியை கண்டுபிடித்துள்ளது.
2. வானவில் : ஹெச்.பி.யின் பிரீமியம் லேப்டாப்
ஹியூலெட் பக்கார்டு (ஹெச்.பி.) நிறுவனம் தனது பிரீமியம் மாடல் லேப்டாப்பை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
3. வானவில் : பூச்சிக்கடியிலிருந்து காப்பாற்றும் சாதனம்
கொசுக்கள் மற்றும் பூச்சிகள் கடித்தால் அந்த இடத்தில் அரிப்பும் தடிப்பும் ஏற்பட்டு பாடாய்ப்படுத்தும். அதுவும் இரவு நேரங்களில் கொசுக்கடியால் தூக்கமே போய்விடும்.
4. வானவில் : சாம்சங்கின் 2 புதிய ஸ்மார்ட்போன்கள்
சாம்சங் நிறுவனம் சீனாவின் ஜியோமி, ஓப்போ போன்றவற்றின் போட்டிகளை சமாளிக்க குறைந்த விலை ஸ்மார்ட் போன்களை தயாரித்து இந்திய சந்தையில் தனது முன்னிலையை தக்க வைத்துக் கொள்வதில் தீவிரம் காட்டி வருகிறது.
5. வானவில் : ஸ்விப்ட் பாயின்ட் ஜிடி மவுஸ்
இப்போது கம்ப்யூட்டர் இல்லாத வீடுகளே இல்லை என்றாகிவிட்டது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரையிலும் கம்ப்யூட்டர் பயன்பாடு மிகவும் அவசியமாகி விட்டது.