சிறப்புக் கட்டுரைகள்

வானவில் : குரடாஸ் ரோபோ + "||" + Vanavil : Krutas robot

வானவில் : குரடாஸ் ரோபோ

வானவில் : குரடாஸ் ரோபோ
எந்திரன் திரைப்படம் வந்ததில் இருந்து அது போன்ற ஒரு ரோபோ உண்மையில் இருக்க முடியுமா என்று நாம் நினைத்திருப்போம். அதை நிஜமாக்கி இருக்கின்றார் ஜப்பானை சேர்ந்த விஞ்ஞானியான கோகோரோ குரடா என்பவர்.
பல அதி நவீன ரோபோக்கள் வந்துவிட்டாலும் அதை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவிற்கு புதுமையான கினெக்ட் (kinect) எனப்படும் தொழில் நுட்பம் கொண்டு நான்கு டன் எடையுடன் இந்த பிரமாண்ட ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது.

13 அடி உயரமுள்ள இந்த ரோபோவின் பெயர் குரடாஸ். நான்கு சக்கரங்கள் கொண்ட இந்த ரோபோ 30 இணைப்புகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. விமான ஓட்டியை போன்று இதனுள்ளே ஒரு நபர் அமர்ந்து கொண்டு இயக்கவும் முடியும். நமது விருப்பத்திற்கேற்ப இந்த ரோபோவை உபயோகித்து கொள்ளலாம்.

ஒரு தீயணைப்பு வீரனை போல அதி வேகமாக நீரை பாய்ச்சும், துப்பாக்கியை இயக்கும். பெரிய வேலைகள் மட்டுமின்றி தரையை சுத்தம் செய்ய சொன்னாலும் செய்யும் இந்த ஆல் இன் ஆல் அழகு ரோபோ.

பலவிதமான தேவைகளுக்காக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த ரோபோ எதிர்காலத் தொழில்நுட்பத்தின் நிகழ்கால சான்று என்பதில் சந்தேகமில்லை.


தொடர்புடைய செய்திகள்

1. வானவில் : எல்.ஜி.யின் ஸ்மார்ட் ரெப்ரிஜிரேட்டர்
இது ஸ்மார்ட்டான உலகம். உங்களது வீட்டு உபயோக பொருட்களும் ஸ்மார்ட்டாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.
2. வானவில் : நடமாடும் ‘எந்திரன்’ டெமி
இப்போது வீடுகளில் பர்சனல் கம்ப்யூட்டர் பெரும்பாலும் அத்தியாவசியமான ஒன்றாகி விட்டது.
3. வானவில் : ஆபத்து கால விசில்
அவசர காலத்தில் நாம் இருக்குமிடத்தை அடையாளம் காட்டி மீட்பர்களை அழைக்க உதவுகிறது விசில்.
4. வானவில் : கோடக் ஸ்மார்ட் போன்
புகைப்படம் சார்ந்த கேமராக்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள கோடக் நிறுவனம் பிரிட்டனைச் சேர்ந்த புல்லிட் நிறுவனத்துடன் இணைந்து கோடக் ஐ.எம். 5 என்ற ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது.
5. வானவில் : நில நடுக்கத்தை கண்டுபிடித்து ‘அலெர்ட்’ செய்யும் அற்புத ‘ஆப்’
இயற்கை பேரழிவுகளை தவிர்க்க முடியாது. நிலநடுக்கம் என்ற சொல்லைக் கேட்டாலே நமக்கு நடுக்கம் ஏற்படும்.