வானவில் : நோக்கியா பாடி பிளஸ்


வானவில் : நோக்கியா பாடி பிளஸ்
x
தினத்தந்தி 10 Oct 2018 9:58 AM GMT (Updated: 10 Oct 2018 9:58 AM GMT)

ஸ்மார்ட் போன் தயாரிக்கும் நோக்கியா நிறுவனம் சுகாதாரம் சார்ந்த கருவிகள் தயாரிப்பிலும் முன்னிலை வகிக்கிறது.

உடல் எடையை கண்காணிக்க உதவும் வை-பையில் செயல்படும் ஸ்மார்ட் எடை மெஷினை அறிமுகம் செய்துள்ளது.

ஸ்மார்ட் எடை இயந்திரம் என்பதாலேயே இதன் செயல்பாடுகளும் நவீனத்துவம் கொண்டதாக உள்ளது. வழக்கமான எடைபார்க்கும் இயந்திரம் உடல் எடையைக் காட்டும். ஆனால் இந்த ஸ்மார்ட் எடை இயந்திரம் பல்வேறு அம்சங்களை காட்டுகிறது. உங்கள் உடல் எடை, உடலின் கொழுப்பு அளவு, நீர் சத்து அளவு, உடலில் எவ்வளவு தசை மற்றும் எலும்பு எடை உள்ளிட்டவற்றை பட்டியலிட்டு உங்களது ஸ்மார்ட்போனுக்கு உடனுக்குடன் அனுப்பிவிடும்.

இதற்காக உங்கள் ஸ்மார்ட் போனில் பதிவிறக்கம் செய்துள்ள ஹெல்த் மேட் ஆப் அனைத்து விவரங்களையும் வை-பை மூலமாக பதிவு செய்யும். இது ஆப்பிள் ஐ.ஓ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்டு 5 பிளஸ் இயங்குதளத்தில் செயல்படுகிறது.

உங்கள் எடை, தினசரி நீங்கள் சாப்பிட வேண்டிய உணவின் அளவு, எந்த அளவுக்கு கலோரி எரிக்கப்பட்டுள்ளது, எந்த அளவு சத்து சேர்ந்துள்ளது போன்ற விவரங்களை இது அளிக்கும்.

ஊட்டச் சத்து உணவுகளை நீங்கள் சாப்பிடுகிறீர்களா, அதன் பலன் எந்த அளவிற்கு உள்ளது போன்ற விவரங்களை இது பதிவு செய்யும்.

இது தவிர அன்றாட வானிலை நிலவரம், உங்கள் எடை எந்த அளவிற்கு நீங்கள் குறைக்க, கூட்ட முடியும் என்ற விவரத்தையும் இது அளிக்கும்.

இதை குடும்பத்தில் உள்ள 8 பேர் வரை பயன்படுத்த முடியும். ஒவ் வொருவருக்கும் தனித்தனி அட்டவணையை இது அளிக்கும்.

எடை இயந்திரத்தில் ஏறி நின்றவுடனேயே இது யாருடையது என்பதை நோக்கியா பாடி பிளஸ் கணித்து விடும்.

உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் போக்கு இப்போது அதிகரித்து விட்டது. அந்த வகையில் குடும்பத்தினரின் உடல் நலனில் அக்கறை உள்ளவர்கள் ஸ்மார்ட்டாக இந்த எடை இயந்திரத்தை வாங்கலாம். ஆன்லைனில் அமேசான் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்து அளிக்கும். விலை 100 டாலர். இந்திய மதிப்பில் ரூ.7,400 ஆக இருக்கும். 

Next Story