வானவில் : நோக்கியா வயர்லெஸ் சார்ஜர்


வானவில் : நோக்கியா வயர்லெஸ் சார்ஜர்
x
தினத்தந்தி 10 Oct 2018 10:03 AM GMT (Updated: 10 Oct 2018 10:03 AM GMT)

செல்போன் தயாரிப்பில் முன்னணியில் உள்ள நோக்கியா நிறுவனம் வயர்லெஸ் சார்ஜரை அறிமுகம் செய்துள்ளது.

 இது நோக்கியா டி.டி. 900 வயர்லெஸ் சார்ஜிங் பிளேட் என்ற பெயரில் அறிமுக மாகியுள்ளது. பிளிப்கார்ட் இணைய தளத்தில் இது கிடைக்கிறது. விலை ரூ.1,999 ஆகும்.

வயர்லெஸ் சார்ஜர் என்பதால் இதன் மீது செல்போனை வைத்தாலே போதும். அது சார்ஜ் ஆகிவிடும்.

இந்த வயர்லெஸ் சார்ஜர் மூன்று பகுதி களைக் கொண்டது. ஒன்று பவர் அடாப்டர், மற்றொன்று கேபிள், மூன்றாவதாக தட்டையான சார்ஜிங் பிளேட். இதில் பவர் கேபிளில் அடாப்டரை சொருகிவிட்டால் அதன் மறுமுனையை சார்ஜிங் பிளேட்டுடன் இணைத்துவிட வேண்டும். சார்ஜிங் பிளேட் மீது செல்போனை வைத்தாலே போதும் அது சார்ஜ் ஆகும். செல்போன் சார்ஜ் ஆகிறது என்பதை உணர்த்த சார்ஜிங் பிளேட்டில் லைட் எரியும். இந்த பிளேட் மீது மொபைல் போனை சரியாக வைக்க வேண்டும். அதாவது தாறுமாறாக வைத்தால் சார்ஜ் ஆகாது. இருந்தாலும் சார்ஜ் ஆவதை உணர்த்தும் செல்போன் ஓசை அல்லது சார்ஜிங் பிளேட்டில் எரியும் விளக்கைக் கொண்டு அறிந்து கொள்ளலாம்.

சார்ஜ் செய்வதற்கு பிளக்கை தேடி அதற்கான பின்னை சொருகி செல்போனை பயன்படுத்த வேண்டும் என்றால் ஸ்விட்ச் ஆப் செய்ய வேண்டும் என்பன போன்ற அசவுகரியங்கள் இதில் கிடையாது. சார்ஜிங் பிளேட் மீது வைத்தபடியே இண்டர்நெட் அழைப்புகளுக்கு பதில் அனுப்ப முடியும். அதேபோல அழைப்பு வந்தால் எடுத்து பேசலாம். பிறகு இதன்மீது வைத்துவிட்டால் சார்ஜ் ஆகிவிடும். இதன் எடை 100 கிராமுக்கும் (93) குறைவே. இதனால் இதை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச்செல்வது எளிது.


Next Story