வானவில் : ஹோவர்சர்ப் ஸ்கார்பியன் பைக்


வானவில் : ஹோவர்சர்ப் ஸ்கார்பியன் பைக்
x
தினத்தந்தி 10 Oct 2018 10:26 AM GMT (Updated: 10 Oct 2018 10:26 AM GMT)

திரைப்படங்களில் ஹீரோக்கள் பைக்கில் பறந்து பறந்து சண்டையிடுவதை பார்த்திருப்போம். ஆனால் நிஜத்தில் பறக்கும் பைக்கை கண்டிருக்கிறீர்களா? ரஷிய நிறுவனமான ஹோவர்சர்ப் இதனை நிகழ்த்தி காட்டியுள்ளது.

ட்ரோன் (DRONE) தயாரிப்பில் முன்னணியில் உள்ள இந்த நிறுவனம் ஸ்கார்பியன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பைக்கை உருவாக்கியுள்ளது. பைக் மற்றும் ஹெலிகாப்டர் இவைகளின் ஒருங்கிணைக்கப்பட்ட வடிவத்தை கொண்டிருக்கிறது. ஒரு நபர் மட்டுமே அமர்ந்து செல்லக் கூடிய இந்த பைக் பூமியில் இருந்து ஐந்து மீட்டர் உயரத்தில் பறக்கக்கூடியது.

எழுபது கிலோமீட்டர் வேகம் வரை செல்லுமாம். பேட்டரியில் இயங்கும் இந்த ஸ்கார்பியன் பைக் தொடர்ந்து இருபத்தி ஐந்து நிமிடங்கள் பறக்கும். விளையாட்டுத் துறையில் மட்டுமே உபயோகிக்கப்பட்ட இந்த வாகனம் விரைவில் துபாய் காவல்துறையினரால் ரோந்து பணியில் ஈடுபடுத்தப் பட உள்ளது. இது பறந்து செல்வதால் போக்குவரத்து பணியில் துரிதமாக செயல்பட உதவும் என்று நம்புகின்றனர்.

Next Story