சிறப்புக் கட்டுரைகள்

வானவில் : இந்தியாவில் முதலாவது லம்போர்கினி டெலிவரி + "||" + Vanavil : First Lamborghini Delivery in India

வானவில் : இந்தியாவில் முதலாவது லம்போர்கினி டெலிவரி

வானவில் : இந்தியாவில் முதலாவது லம்போர்கினி டெலிவரி
சொகுசு மற்றும் ஆடம்பரத்துக்குப் பெயர் போன லம்போர்கினி உருஸ் கார், மும்பையில் முதன்முதலில் டெலிவரி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இந்தியச் சந்தையில் நுழைந்த லம்போர்கினி, இந்த ஆண்டிலிருந்து தனது விற்பனையைத் தொடங்கியுள்ளது.

மும்பையில் உள்ள ஒருவருக்கு லம்போர்கினி உருஸ் கார் டெலிவரி செய்யப்பட்டுள்ளது.

லம்போர்கினி என்றாலே சிவப்பு என்று ஒரு அர்த்தமும் உள்ளது. சிவப்பு நிறத்தில் மிகவும் அழகான தோற்றப் பொலிவுடன் கம்பீரமாக காட்சி தருகிறது. இதன் உள்புறம் கருப்பு நிற சீட்கள் மற்றும் மேற்கூரை (சன் ரூபிங்) வசதி கொண்டது. இதில் 360 டிகிரி சுழலும் கேமரா உள்ளது. இதேபோல இதில் 3 டி (முப்பரிமாண) இசை கார் முழுவதும் ரம்மியமாக பரவும். இதில் வாகனத்தை 7 விதமான வகைகளில் ஓட்ட முடியும்.


இது எம்.எல்.பி. இ.வி.ஓ. பிளாட்பார்மில் தயாரானது. போக்ஸ்வேகன் குழுமத்தின் எஸ்.யு.விக்கள் ரகமான பென்டகயா மற்றும் போர்ஷே மற்றும் கேய்ன் ஆகிய மாடல்களைப் போன்றே 4 லிட்டர் என்ஜின், ட்வின் டர்போ வி8 மாடல் 650 பி.ஹெச்.பி. திறன், 850 நியூட்டன் மீட்டர் டார்க் ஆகியவை கொண்டது. இதில் நான்கு சக்கரமும் இயங்க கூடியது. 100 கி.மீ. வேகத்தை 3.6 வினாடிகளில் எட்டிவிட முடியும். இதில் அதிகபட்ச வேகம் 305 கிலோ மீட்டராகும். இதன் முன்புறத்தில் 440 மி.மீ. கார்பன் செராமிக் டிஸ்க் பிரேக் உள்ளது.

இந்தக் காரின் விலை ரூ.3.10 கோடி. இதில் சில வசதிகள் செய்து தரப்படும் பட்சத்தில் இதன் விலை ரூ. 4 கோடியைத் தொட்டுவிடும். அந்த வகையில் மும்பை வாடிக்கையாளருக்கு டெலிவரி செய்யப்பட்ட காரின் விலையும் ரூ.4 கோடியைத் தொட்டிருக்கும் என்றே தோன்றுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. வானவில் : எல்.ஜி.யின் ஸ்மார்ட் ரெப்ரிஜிரேட்டர்
இது ஸ்மார்ட்டான உலகம். உங்களது வீட்டு உபயோக பொருட்களும் ஸ்மார்ட்டாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.
2. வானவில் : நடமாடும் ‘எந்திரன்’ டெமி
இப்போது வீடுகளில் பர்சனல் கம்ப்யூட்டர் பெரும்பாலும் அத்தியாவசியமான ஒன்றாகி விட்டது.
3. வானவில் : ஆபத்து கால விசில்
அவசர காலத்தில் நாம் இருக்குமிடத்தை அடையாளம் காட்டி மீட்பர்களை அழைக்க உதவுகிறது விசில்.
4. வானவில் : கோடக் ஸ்மார்ட் போன்
புகைப்படம் சார்ந்த கேமராக்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள கோடக் நிறுவனம் பிரிட்டனைச் சேர்ந்த புல்லிட் நிறுவனத்துடன் இணைந்து கோடக் ஐ.எம். 5 என்ற ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது.
5. வானவில் : நில நடுக்கத்தை கண்டுபிடித்து ‘அலெர்ட்’ செய்யும் அற்புத ‘ஆப்’
இயற்கை பேரழிவுகளை தவிர்க்க முடியாது. நிலநடுக்கம் என்ற சொல்லைக் கேட்டாலே நமக்கு நடுக்கம் ஏற்படும்.