சிறப்புக் கட்டுரைகள்

கரடியுடன் அக்ரோபடிக்ஸ் + "||" + Acrobatics with a bear

கரடியுடன் அக்ரோபடிக்ஸ்

கரடியுடன் அக்ரோபடிக்ஸ்
ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஸ்டெபானி மில்லிங்கர், அக்ரோபடிக்ஸ் கலைஞராக இருக்கிறார்.
சமீபத்தில் தன்னுடைய உதவியாளரான பழுப்புக் கரடியுடன் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு, விதவிதமாகப் படங்கள் எடுத்து வெளியிட்டிருக்கிறார். உடலை ரப்பர்போல் வளைப்பதில் மிகச் சிறந்தவராக அறியப்படுகிற இந்த ஸ்டெபானி, ஜெர்மனியில் நடைபெற்ற ‘டாஸ் சூப்பர்டேலண்ட்’ ஷோவின் இறுதிப் போட்டியாளர்களில் ஒருவர்.

‘‘என்னைப்போல் உலகம் முழுவதும் அக்ரோபடிக்ஸ் கலைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களில் இருந்து நான் எந்த விதத்திலாவது வித்தியாசப்பட வேண்டும் என்று நினைத்தேன். அப்போதுதான் என்னுடைய நண்பன் ஸ்டீபன் கரடியை வைத்து, உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும் என்ற யோசனை தோன்றியது. அவனும் எனக்கு நன்றாக ஒத்துழைத்து, என் உதவியாளனாகவே மாறிவிட்டான்! 

பனிப்பகுதியில் படங்களை எடுக்க முடிவு செய்தேன். கை, கால்களில் உறைகள் அணிந்துகொண்டேன். ஸ்டீபனுக்குக் குளிரைத் தாங்குவதில் பிரச்சினை ஒன்றும் இல்லை. ஒவ்வொரு படமும் எடுத்தவுடன் சில பெர்ரிகளைக் கொடுத்தால் போதும். அவ்வளவு ஆர்வமாக வேலை செய்தான். நான் நினைத்ததைவிட படங்கள் நன்றாக வந்திருக்கின்றன. 

இந்தப் படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டவுடன் என்னைப் புதிதாகப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்தைக் கடந்து விட்டது!” என்கிறார் ஸ்டெபானி.