சிறப்புக் கட்டுரைகள்

தினம் ஒரு தகவல் : குறைந்து வரும் தூக்கம் + "||" + Day One Message: Decreased Sleep

தினம் ஒரு தகவல் : குறைந்து வரும் தூக்கம்

தினம் ஒரு தகவல்  : குறைந்து வரும் தூக்கம்
வயதானாலே தூக்கம் குறைந்துவிடும் என்பது எல்லோருக்கும் தெரியும். பிறந்த குழந்தை ஒரு நாளுக்கு 20 மணிநேரம் தூங்கும்.
வயதாக ஆக தூக்கத்தின் அளவு நான்கைந்து மணிநேரமாகக் குறைந்துவிடும். தூக்கத்தின் அளவு மட்டுமின்றி, தூக்கத்தின் ஆழமும் குறையத் தொடங்கும். அடிக்கடி விழிப்பு ஏற்படுவது, சிறிய சத்தம் கேட்டால்கூட விழித்துக்கொள்வது என்று இருக்கும்.

அவ்வாறு தூக்கம் வராமல் இருப்பதற்கு மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள் ஒரு முக்கிய காரணம் என்றாலும், வேறு சில காரணங்களும் இருக்கின்றன. முதன்மை காரணம், எந்த செயல்பாடுகளும் இல்லாமல் சும்மாவே இருப்பது. அலுவலகத்திற்கு வேலைக்கு செல்வது, வீடு திரும்புவது, தொழில் செய்பவராக இருந்தால் கடையை திறப்பது, அடைப்பது என்று அன்றாட பல விஷயங்கள் குறிப்பிட்ட நேரத்தில் சரியாக நடக்கும். இதை ஆங்கிலத்தில் டைம் மேக்கர்ஸ் (நேரக் குறிப்பான்கள்) என்று அழைக்கிறார்கள். இந்த செயல்கள் நடைபெறும் போது, நம் உடல் குறிப்பிட்ட செயல்களைச் செய்துவிட்டுத் தூங்கப் பழகியிருக்கும். வயதான பின்பு இந்த செயல்பாடுகள் இல்லை எனும் போது தூக்கம் வராமல் அவதிப்பட நேரிடுகிறது.

ஆகவே ஒரு அட்டவணைப்படித் தினமும் காலையிலிருந்து குறிப்பிட்ட செயல்களைக் குறிப்பிட்ட நேரத்தில் செய்து பழக வேண்டும். அதன்படி மாலை வெளியே சென்று வருவது, டைரி எழுதுவது, பேரன், பேத்திக்குக் கதை சொல்வது என்று குறிப்பிட்ட செயல்களைச் செய்த பின் தூங்குவது என்று வழக்கப் படுத்திக் கொள்ள வேண்டும்.

தூக்கம் வரவில்லை என்று படுக்கையிலேயே புரண்டு கொண்டிருக்காமல் எழுந்து விட வேண்டும். நல்ல புத்தகங்களைப் படிக்கலாம். தூங்குவதற்கு முன்பு அதிக சிந்தனையோ, கவலையோ கூடாது. மெகா சீரியல்களில் அதிக கவனம் எடுத்து கொண்டு, அடுத்து என்ன நடக்குமோ என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கக் கூடாது. நடைப்பயிற்சி அவசியம். காபி, டீ போன்றவற்றை அதிகம் குடித்தால் தூக்கம் கெடுவது உறுதி. குறிப்பாக, தூக்கம் வரவில்லையே என்று கவலைப் பட்டால், இருக்கும் தூக்கமும் போய்விடும். தேடுவதை நிறுத்துங்கள். தேடியது கிடைக்கும் என்பது ஓஷோவின் வாக்கு. பணம், புகழ் போல் அது தூக்கத்துக்கும் பொருந்தும். 


தொடர்புடைய செய்திகள்

1. பெண்களின் பொலிவை குறைக்கும் சமூக வலைத்தளங்கள்
இளைஞர்களையும் இணையதளத்தையும் பிரிப்பது கடினம் என்று சொல்லும் அளவுக்கு வெப் அவர்களது நேரத்தை விழுங்குகிறது.
2. கட்டிட கழிவுகள் மறுசுழற்சி
பிரமாண்டமான கட்டிடங்கள் பெருகி வரும் இந்திய பெருநகரங்களில் கட்டுமான கழிவால் ஏற்படும் சூழல் பாதிப்புகள் அதிகம்.
3. கூச்ச சுபாவம் உடைய வேங்கைப் புலி
நாம் நினைப்பதற்கு மாறாக வேங்கைப் புலி மிகவும் கூச்ச சுபாவம் கொண்ட ஓர் உயிரினம். உள்ளடங்கிய காட்டுப் பகுதியிலேயே வாழும்.
4. பூமி வெப்பமடைதல் குறித்த ஆய்வு
இந்த நூற்றாண்டில் மனித குலம் எதிர்கொண்டுள்ள மிகப் பெரிய சுற்றுச்சூழல் பிரச்சினை பூமி வெப்பமடைதல், பருவநிலை மாற்றம்.
5. தினம் ஒரு தகவல் : குழந்தைகளின் முரட்டுத்தனம்
சில குழந்தைகளிடம் காணப்படும் முரட்டுத்தனத்தைப் பிஞ்சுப் பருவத்திலேயே சரிசெய்யாவிட்டால் அவர்கள் பெரியவர்கள் ஆன பின்னரும் அது தொடரும்.