செயற்கை கருத்தரிப்பில் பிறந்த சிங்கக்குட்டிகள்!


செயற்கை கருத்தரிப்பில் பிறந்த சிங்கக்குட்டிகள்!
x
தினத்தந்தி 13 Oct 2018 11:07 AM GMT (Updated: 13 Oct 2018 11:07 AM GMT)

தென்ஆப்பிரிக்காவில் செயற்கை கருத்தரிப்பு முறையில் இரு சிங்கக்குட்டிகள் பிறந்திருக்கின்றன.

26 ஆப்பிரிக்க நாடுகளில் சிங்கங்கள் அதிகம் வாழ்கின்றன. கடந்த 20 ஆண்டுகளாக அவை தொடர்ந்து அழிந்து வருகின்றன. 43 சத வீதம் சிங்கங்கள் அழிந்துவிட்ட நிலையில், தற்போது உலகளவில் 20 ஆயிரம் சிங்கங்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன.

இந்நிலையில் சிங்க இனத்தைக் காப்பாற்ற விஞ்ஞானிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், சமீபத்தில் தென்ஆப்பிரிக்க தலைநகர் பிரிட்டோரியாவில் உள்ள பல்கலைக்கழக விஞ்ஞானிகள் பெண் சிங்கத்துக்கு செயற்கை முறையில் கருத்தரிப்புச் செய்தனர்.

முன்னதாக, உடல் திடகாத்திரமான ஆண் சிங்கத்தின் உயிரணுவைச் சேகரித்தனர். அதை தகுதி வாய்ந்த பெண் சிங்கத்தின் கருமுட்டையுடன் இணைத்து செயற்கை கருத்தரிப்புச் செய்தனர். பின்னர் அதை பெண் சிங்கத்தின் கர்ப்பப்பைக்குள் வைத்தனர்.

அதைத் தொடர்ந்து 2 சிங்கக்குட்டிகள் பிறந்தன. ஓர் ஆண், ஒரு பெண் என அந்த இரண்டு குட்டிகளும் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளன. ஒரே மாதிரியுள்ள 2 குட்டிகளும் வனவிலங்குகள் சரணாலயத்தில் ஓடியாடி விளையாடுகின்றன. அவற்றை பொதுமக்கள் கண்டு ரசிக்கின்றனர்.

இதன்மூலம், முதல்முறையாக செயற்கை கருத்தரிப்பின் மூலம் பிறந்த சிங்கக்குட்டிகள் என்ற பெருமையை அவை பெற்றுள்ளன. இத்தகைய செயற்கை கருத்தரிப்பு முறை மூலம் வடஅமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அழிந்துவரும் யானை இனத்தைப் பாதுகாக்க முடியும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இயற்கையாய் வாழ்வதை அழித்துவிட்டு, ‘செயற்கை’யாய் முயற்சி செய்ய வேண்டி யிருக்கிறது!


Next Story