தேன்சிட்டு கண்டுபிடிப்பு!


தேன்சிட்டு கண்டுபிடிப்பு!
x
தினத்தந்தி 13 Oct 2018 11:23 AM GMT (Updated: 13 Oct 2018 11:23 AM GMT)

ஈக்குவடார் நாட்டில் புதிய வகை ஹம்மிங் பேர்டு (தேன்சிட்டு) ஒன்றை சர்வதேச பறவை ஆய்வாளர் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.

அந்தப் பறவைக்கு ஒரியோட்ரோகிலஸ் சைனோலெமஸ் அல்லது நீலக் கழுத்து ஹில்ஸ்டார் எனப் பெயரிடப்பட்டுள்ளது. அப்பறவைக்கு நான்கு அங்குல நீளத்துக்கு கருநீலக் கழுத்து இருப்பதால் இப்பெயரைச் சூட்டியிருக்கிறார்கள்.

ஈக்குவடாரில் பல்லுயிர்ப் பெருக்கம் சிறப்பாக உள்ளது. இந்நாட்டில் மட்டும் 132 வகை ‘ஹம்மிங் பேர்டு’கள் உள்ளன.

புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட நீலக் கழுத்து ஹில்ஸ்டார்கள் மொத்தமே சுமார் 300தான் உள்ளதாகக் கூறும் ஆய்வாளர்கள், இந்த இனம் அழிவின் விளிம்பில் இருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.

ஈக்குவடார், வெனிசூலா, டென்மார்க், சுவீடன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பறவை ஆய்வாளர்கள் குழு இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்தி உள்ளது. இந்தக் குழுவுக்கு பிரான்சிஸ்கோ என்பவர் தலைமை தாங்கினார்.

புதிய தேன்சிட்டு கண்டுபிடிப்பு, பறவை ஆய்வாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

Next Story