சிறப்புக் கட்டுரைகள்

வானவில் : டெல் ஏலியன்வேர் அறிமுகம் + "||" + Vanavil : Dell Alienware

வானவில் : டெல் ஏலியன்வேர் அறிமுகம்

வானவில் : டெல் ஏலியன்வேர் அறிமுகம்
கம்ப்யூட்டர், லேப்டாப் தயாரிப்பில் முன்னிலையில் உள்ள டெல் நிறுவனம் விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கேற்ற லேப்டாப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்கு ஏலியன்வேர் 15 எம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட இது அளவில் மிகப் பெரியது. ஆனால் இதன் எடை குறைவானது. அதேசமயம் இதன் தடிமனும் சற்று குறைவு. 15 அங்குல திரை கொண்ட இந்த கேமிங் லேப்டாப் எடை 2.17 கிலோ மட்டுமே. 

முந்தைய மாடலைக் காட்டிலும் இதன் எடை 20 சதவீதம் குறைவு.அதேபோல இதன் தடிமன் முந்தைய மாடலை விட 14 சதவீதம் மெல்லிதானது. தொடர்ந்து 17 மணி நேரம் செயல்படும் வகையில் மிகவும் உறுதியான பேட்டரியைக் கொண்டதாக இது உள்ளது. எபிக் சில்வர் மற்றும் நெபுலா ரெட் ஆகிய நிறங்களில் இது விற்பனைக்கு வந்துள்ளது. ஏலியன்வேர் 15 மாடல் விலை ரூ. 95,700 ஆகும்.

ஏலியன்வேர் எம் 15 மாடலின் திரை 15.6 அங்குலம். இது மெக்னீசியம் அலாய் மேல்புறத்தைக்கொண்டுள்ளது. இதனுடன் இரண்டு வகையான பேட்டரி தேர்வுகள் அளிக்கப்படுகின்றன. 90 வாட் மற்றும் 60 வாட் பேட்டரி உள்ளது. இதில் 90 வாட் பேட்டரி 10 மணி நேரமும், 60 வாட் பேட்டரி 7 மணி நேரமும் செயல்படும். தேவைக்கேற்ப பேட்டரிகளைத் தேர்வு செய்து கொள்ளலாம். இதில் 8-ம் தலைமுறை இன்டெல் பிராசஸர் உள்ளது. 

தேவைப்பட்டால் 6-ம் தலைமுறை இன்டெல் பிராசஸரை வாங்கிக் கொள்ளலாம். மேக்ஸ் க்யூ கிராபிக்ஸ் கார்டு, ஏலியன்வேர் கிராபிக்ஸ் ஆம்பிளிபயர் கொண் டது. இதில் 16 ஜி.பி. ரேம் நினைவகம் உள்ளது. இதை 1 டிரில்லியன் வரை விரிவாக்கம் செய்யும் வசதி உள்ளது. இதில் 3 யு.எஸ்.பி. போர்ட்கள் உள்ளன. கம்ப்யூட்டர் விளையாட்டுக்கு ஏற்ற லேப்டாப் இது. 


தொடர்புடைய செய்திகள்

1. வானவில் : எல்.ஜி.யின் ஸ்மார்ட் ரெப்ரிஜிரேட்டர்
இது ஸ்மார்ட்டான உலகம். உங்களது வீட்டு உபயோக பொருட்களும் ஸ்மார்ட்டாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.
2. வானவில் : நடமாடும் ‘எந்திரன்’ டெமி
இப்போது வீடுகளில் பர்சனல் கம்ப்யூட்டர் பெரும்பாலும் அத்தியாவசியமான ஒன்றாகி விட்டது.
3. வானவில் : ஆபத்து கால விசில்
அவசர காலத்தில் நாம் இருக்குமிடத்தை அடையாளம் காட்டி மீட்பர்களை அழைக்க உதவுகிறது விசில்.
4. வானவில் : கோடக் ஸ்மார்ட் போன்
புகைப்படம் சார்ந்த கேமராக்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள கோடக் நிறுவனம் பிரிட்டனைச் சேர்ந்த புல்லிட் நிறுவனத்துடன் இணைந்து கோடக் ஐ.எம். 5 என்ற ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது.
5. வானவில் : நில நடுக்கத்தை கண்டுபிடித்து ‘அலெர்ட்’ செய்யும் அற்புத ‘ஆப்’
இயற்கை பேரழிவுகளை தவிர்க்க முடியாது. நிலநடுக்கம் என்ற சொல்லைக் கேட்டாலே நமக்கு நடுக்கம் ஏற்படும்.